தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான அக்டோபர் 25ம் தேதியன்று கூடுதலாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் நவம்பர் 19ஆம் தேதியன்று சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
விடுமுறை (Holiday)
தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை என்று தொடர்ந்து 3 நாட்கள் மட்டுமே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பண்டிகைக்கு வெளியூர்களுக்கு செல்லும் அனைவரும் தீபாவளி பண்டிகை முடிந்த அடுத்த நாள் தான் மீண்டும் தங்கள் ஊர்களுக்கு திரும்ப முடியும். இதற்காக அக்டோபர் 25ம் தேதி தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
மக்களின் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு அக்டோபர் 25ம் தேதி ஆகிய தீபாவளி மறுநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக உத்தரவிட்டது. இந்நிலையில், கூடுதல் விடுமுறை அளித்துள்ளதால் இதனை ஈடுகட்ட நவம்பர் 19ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
வேலைநாள்
அதன்படி தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நவம்பர் 19ஆம் தேதியன்று தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி மறுநாள் விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 19ஆம் தேதி பணிநாளாக அறிவித்து உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: சம்பளத்தை உயர்த்தும் அரசு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பரான திட்டம்: விண்ணப்பிக்க மார்ச் 2023 தான் கடைசி!
Share your comments