குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களிடையே, தயாரிப்பு திறனை ஊக்குவிப்பதற்கும், சமீபத்திய தொழில்நுட்பங்களை ஏற்பதற்கும், அறிவுசார் சொத்துரிமை குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்கும் உதவும் வகையில், ஒரு திட்டத்தை அரசு அறிமுகம் செய்து உள்ளது. இந்த திட்டம் அடைகாத்தல், வடிவமைப்பு, அறிவுசார் சொத்துரிமை ஆகிய திட்டங்களின் ஒரு கலவையான திட்டமாகும்.
இந்த திட்டத்தை குறு, சிறு, நடுத்தர அமைச்சகம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார் மத்திய குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் நாராயண் ரானே.
புதிய திட்டம் (New Scheme)
நாட்டின் ஏற்றுமதியில் மிகப் பெரும் பங்கு வகிக்கும் தொழில்துறையினருக்கு, இந்த திட்டம் மிகவும் உதவிகரமாக இருக்கும். தொழில் துறையினர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள முன்வர வேண்டும்.
இந்த திட்டத்தின் கீழ் புதுமை, வடிவமைப்பு, அறிவுசார் சொத்துரிமை ஆகியவற்றுக்கான நிதி உதவிகளையும் அமைச்சகம் ஏற்படுத்தி தரும்.
தயாரிப்புகளை மேம்படுத்தும் பொருட்டு, நிபுணர்களின் ஆலோசனையை பெறுவதற்கும் இந்த திட்டம் உதவியாக இருக்கும்.
மேலும் படிக்க
Share your comments