விவசாயத்திற்கும் மண்ணுக்கும் உள்ள தொடர்பு தெய்வீகமானது. சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோரின் ஆசிகள் இன்று நம் விவசாய நிலத்தில் உள்ளது என மேற்கு வங்காள ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் தெரிவித்துள்ளார்.
இன்று கிருஷி ஜாக்ரன் நிறுவனத்திற்கு சிறப்பு விருந்தினராக வருகைத் தந்த ஆளுநர், கிருஷி ஜாக்ரான் மேற்கொண்டு வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு வெகுவாக பாராட்டினார். இதன் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பங்கேற்ற ஆளுநர் சி.வி. ஆனந்த் போஸ் பல கருத்துக்களை அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள், உயர் அலுவலர்கள் முன்னிலையில் பகிர்ந்து கொண்டார்.
"கடவுள்களின் தேசம் எனப் புகழ் பெற்ற கேரளாவைச் சேர்ந்தவன் தான் நானும். செழிப்பு, செல்வம் என்ற பெயரால் மனிதகுலம் இன்று விவசாயத்தை புறக்கணித்து வருகிறது. இயற்கை விவசாயத்துடன் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் கலந்த இயற்கை விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு நாட்டில் பசுமைப் புரட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.
”உங்களுக்கு தேவையானதை விவசாயம் வழங்குகிறது. இயற்கையானது பால் முதல் அனைத்தையும் நமக்கு வழங்குகிறது, அதனால்தான் நம் முன்னோர்கள் இயற்கையை சிறந்த ஆசிரியர் என்று அழைத்தனர். இயற்கை துரோகம் செய்யாது என்றும், ஒவ்வொரு விவசாயியும் விவசாயப் போராளிகளைப் போன்றவர்கள்” என்றும் அவர் பேசினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய கிருஷி ஜாக்ரன் நிறுவனர் மற்றும் தலைமை ஆசிரியரான எம்.சி.டோமினிக், “நமது நிறுவனத்திற்கு ஏராளமானோர் வந்துள்ளனர். ஆனால் இன்று ஒரு நடமாடும் விக்கிப்பீடியாவை வந்துள்ளது என ஆளுநரின் அறிவாற்றலை புகழ்ந்து பேசினா”. ஆளுநர் போஸுடன் அமர்ந்தால் நாம் அனைத்தையும் மறந்து விடுவோம். விவசாய உலகில் அவர் பணியாற்றிய விதம் மகத்தானது எனவும் தெரிவித்தார்."
சிறந்த எழுத்தாளரும் கட்டுரையாளருமான டாக்டர் போஸ், நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் என ஆங்கிலம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் 50 புத்தகங்கள் உட்பட 350 வெளியீடுகளை வெளியிட்டுள்ளார். அவரது நான்கு புத்தகங்கள் சிறந்த விற்பனையாகியுள்ளன என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிரிஷி ஜாக்ரன் இயக்குனர் ஷைனி டோமினிக், க்ரிஷி ஜாக்ரன் நிர்வாக இயக்குனர்கள் கோ.பி.கே.பந்த், பொது விவகாரத் தலைவர் பிஎஸ் சைனி, உள்ளடக்கத் துறை தலைவர் சஞ்சய் குமார், சமூக ஊடகவியல் ஜிஎம் நிஷாந்த் தக் மற்றும் உள்ளடக்க மேலாளர் பங்கஜ் கண்ணா ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மேலும் காண்க:
Share your comments