1. செய்திகள்

இலங்கை உட்பட 6 நாடுகளுக்கு வெங்காய ஏற்றுமதி செய்ய அனுமதி!

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
export onions

வெங்காயம் மீதான ஏற்றுமதி தடையை இந்திய அரசாங்கம் நீக்கியுள்ளது. இந்த உத்தரவின் மூலம் சுமார் 99,150 மெட்ரிக் டன் வெங்காயத்தினை 6 அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இந்திய அரசு அனுமதித்துள்ளது. வெங்காய ஏற்றுமதியில் மகாராஷ்டிரா மாநிலம் முதன்மை சப்ளையராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

வங்கதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பூடான், பஹ்ரைன், மொரிஷியஸ் மற்றும் இலங்கை ஆகிய ஆறு அண்டை நாடுகளுக்கு 99,150 மெட்ரிக் டன் (எம்டி) வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2023-24 ஆம் ஆண்டிற்கான கரீஃப் மற்றும் ராபி பருவ பயிர்கள் வரத்து குறைவாக மதிப்பிடப்பட்டதால், உலக சந்தையில் தேவை அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தடை நீக்கம் தொடர்பான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

ஏற்றுமதியை மேற்கொள்ளும் NCEL:

தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட் (NCEL) மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செயல்முறையை மேற்கொள்ளும். NCEL- வெங்காயத்தை உள்நாட்டிலேயே குறைந்த (L1) விலையில் இ-பிளாட்ஃபார்ம் மூலம் பெறுவார்கள் மற்றும் அவற்றை அரசு பரிந்துரைக்கும் நிறுவனங்களுக்கு பேச்சுவார்த்தை மூலம் குறிப்பிட்ட விலையில் வழங்குவார்கள். முன்கூட்டியே முழுமையாக பணம் செலுத்த வேண்டும். NCEL வழங்கும் விலையானது இலக்கு மற்றும் சர்வதேச சந்தைகள் இரண்டிலும் நிலவும் விகிதங்களைக் கருத்தில் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளை வெங்காய ஏற்றுமதி:

நாட்டிலேயே வெங்காயம் அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலமான மகாராஷ்டிரா, வெங்காயத்தை ஏற்றுமதி செய்வதற்கான முதன்மை ஆதாரமாகவும் விளங்குகிறது. வழக்கமான வெங்காயம் தவிர, மத்திய கிழக்கு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளின் சந்தைகளுக்காக பிரத்யேகமாக பயிரிடப்பட்ட 2,000 மெட்ரிக் டன் வெள்ளை வெங்காயத்தை ஏற்றுமதி செய்யவும் அரசாங்கம் அனுமதித்துள்ளது. வெள்ளை வெங்காயத்திற்கான உற்பத்தி செலவுகள், விதை செலவுகள் அதிகரித்துள்ள நிலையில் அவற்றின் ஏற்றுமதி மதிப்பு மற்ற வெங்காய வகைகளுடன் ஒப்பிடும்போது கூடுதலாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் வைக்கம், போதுமான இருப்புகளை உறுதி செய்யவும், நுகர்வோர் விவகாரங்கள் துறை, (Price Stabilization Fund -PSF) கீழ் ரபி-2024 பருவ பயிரிலிருந்து 5 லட்சம் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF) மற்றும் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (NAFED) போன்ற மத்திய முகமைகள் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (FPOs), உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனங்கள் (FPCs) மற்றும் முதன்மை வேளாண்மை உள்ளூர் ஏஜென்சிகளுடன் இணைந்து கொள்முதல் பணியினை மேற்கொள்ள உள்ளன.

மகாராஷ்டிராவில் உள்ள நாசிக் மற்றும் அகமதுநகர் மாவட்டங்களுக்கு நுகர்வோர் விவகாரத் துறை, NCCF மற்றும் NAFED ஆகியவற்றின் உயர்மட்டக் குழு சமீபத்தில் சென்றது.

சேமிப்பக இழப்பை குறைக்க, கதிரியக்க மற்றும் குளிரில் சேமிக்கப்படும் வெங்காயத்தின் அளவை கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 1200 மெட்ரிக் டன்னிலிருந்து 5000 மெட்ரிக் டன்னாக இந்த ஆண்டு அதிகரிக்க நுகர்வோர் விவகாரத் துறை முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more:

தாவர வளர்ச்சிக்கு உதவும் 5 ஹார்மோன்கள்- முழுவிவரம் காண்க!

வெப்ப அலை: கால்நடை கொட்டகையினை எப்படி ரெடி செய்வது?

English Summary: Govt Allowed to export onions to 6 countries including Sri Lanka Published on: 28 April 2024, 05:03 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.