சென்னையில் இன்று (மார்ச் 25) பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.67, டீசல் ரூ.93.71 ஆக உள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் பெட்ரோல் ரூ.2.27, டீசல் ரூ.2.28 விலை அதிகரித்துள்ளது.
பெட்ரோல் விலை உயர்வு (Petrol Price Hike)
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் என கூறப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 5 முதல் 137 நாட்களாக தொடர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.81, டீசல் ரூ.91.88 என ஒரே விலையில் நீடித்த நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடந்த 4 நாட்களுக்கு முன் உயரத் துவங்கியது.
சென்னையில், நேற்று பெட்ரோல், டீசல் விலை மாற்றம் செய்யப்படாமல் இருந்த நிலையில், இன்று விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் 76 காசுகள் அதிகரித்து ரூ.103.67, டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.93.71க்கு விற்பனை செய்யப்படுகிறது.
4 நாட்களில் பெட்ரோல் ரூ.2.27, டீசல் ரூ.2.28 அதிகரித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கவலையில் உள்ளனர்.
மேலும் படிக்க
தமிழகத்தில் 137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு!
வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு: அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
Share your comments