1. செய்திகள்

விவசாயிகளுக்காகப் பசுமைப் பேருந்து சேவை-தமிழகத்திலும் தொடங்கப்படுமா?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Green bus service for farmers-Will it be launched in Tamil Nadu too?
Credit : Dailythanthi

விவசாய விளை பொருட்களை எடுத்துச் செல்ல ஏதுவாக கர்நாடகத்தில் விரைவில் பசுமை பேருந்து சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சக பயணிகள் பாதிப்பு (Vulnerability of fellow passengers)

தரமான காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்கி உண்ணும்போது ருசிக்கும் மக்களுக்கு, பொதுப் போக்குவரத்தில், காய்கறிகள் மற்றும் ஏற்றுச்செல்வது பெரும் இடையூறாகவேக் கருதப்படும்.

இதன் காரணமாக, விவசாயிகள் தங்கள் விளைபொருட்களைப் பொதுப்போக்குவரத்தில் கொண்டு செல்லும் போது பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது.

கிசான் ரயில் சேவை (Kisan train service)

இதனைக் கருத்தில்கொண்டு, மத்திய அரசின் சார்பில் கிசான் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, தங்கள் மாநில விவசாயிகளுக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கும் பசுமைப் பேருந்துத் திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது கர்நாடக அரசு.
அதன்படி, விவசாயிகள் தங்களை விளைபொருட்களைக் கொண்டு செல்ல பசுமை பேருந்துகளில் எவ்வித சிரமமும் இன்றிக் கொண்டு செல்லலாம்.

புதியத் திட்டம் (New project)

அந்த வகையில் கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி.) வேளாண் விளைபொருட்களை ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்ல பசுமை பேருந்து சேவையைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.

ஊரடங்கால் பாதிப்பு (Curvature damage)

இதுகுறித்து கே.எஸ்.ஆர்.டி.சி. நிர்வாக இயக்குனர் சிவயோகி கூறியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா ஊரடங்கால் விவசாயிகள் தங்களது விளைப்பொருட்களை விற்பனை செய்யப் போக்குவரத்து வசதி இல்லாததால் அவதிப்பட்டனர்.

நஷ்டம் (Loss)

மேலும் கொரோனா ஊரடங்கால் கர்நாடக அரசு போக்குவரத்து கழகமும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதனை ஈடுசெய்யும் வகையில் பல்வேறுப் புதுமைகளைப் போக்குவரத்துக் கழகத்தில் புகுத்து வருகிறோம்.

பசுமை பேருந்து சேவை (Green bus service)

அதன்படி விவசாயிகள் பயன்பெறும் வகையிலும், போக்குவரத்துக்கு கழகத்திற்கு வருவாய் கிடைக்கும் நோக்கிலும் பசுமை பேருந்து சேவையைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம்.

குறைந்த செலவில் (At low cost)

இதன் மூலம் விவசாயிகள் குறைந்த செலவில் தாங்கள் விளைவிக்கும் பழங்கள், காய்கறிகளைச் சந்தைகளுக்கு எடுத்துச் செல்லவும், விற்பனைக்கு கொண்டு செல்லவும் முடியும்.

கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் 10 லட்சம் கிலோ மீட்டர் தூரத்திற்கு பேருந்து சேவையை வழங்கி வருகிறது. மொத்தம் 8,738 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

10 ஆண்டு பேருந்து (10 year old bus)

இதில் 565 பேருந்துகள் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆன பழைய பேருந்துகள். இந்தப் பேருந்துகளைப் புதுப்பித்துப் பசுமை பேருந்து சேவைக்குப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது பெங்களூருவில் 11 பேருந்துகளும், துமகூருவில் 57 பேருந்துகளும், கோலாரில் 18 பேருந்துகளும், சிக்கபள்ளாப்பூரில் 32 பேருந்துகளும், மைசூரு மைசூரு மாநகரில் 188 பேருந்துகளும், இயக்கப்பட உள்ளன. இதேபோல் பிற பகுதிகளில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படும்.

விரைவில் (Coming soon)

விவசாயிகளின் விளை பொருட்களைக் கொண்டு செல்ல ஏற்கனவே கிஷான் ரயில் சேவையை ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. அதுபோல் நாங்களும் பசுமை பேருந்துகளை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளோம். இந்த பேருந்து சேவை விரைவில் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இதுபோன்றத் திட்டத்தை தமிழக அரசும் தொடங்குமா என தமிழக விவசாயிகளும் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் படிக்க...

சம்பங்கி பூ தொடரும் விலை வீழ்ச்சியால் கலக்கத்தில் விவசாயிகள்! கிலோ ரூ.130லிருந்து ரூ.30க்கு குறைந்த அவலம்!!

ஆசிரியர் தொழிலுடன் சேர்த்து, தினமும் 8 கிலோ சம்பங்கி பூ சாகுபடி செய்து அசத்தும் பெண் விவசாயி!

English Summary: Green bus service for farmers-Will it be launched in Tamil Nadu too? Published on: 18 July 2021, 11:53 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.