ஆஸ்துமா, மூட்டு அழற்சி பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கான மூலக்கூறுகளை உருவாக்குவதில், பசுமை வேதி தொழில்நுட்ப முறையை கண்டறிந்ததற்காக, சென்னையை சேர்ந்த பெண் விஞ்ஞானிக்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. சென்னை ஐ.ஐ.டி.,யின் வேதியியல் துறையை சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் பூங்குழலி. இவர், துறை சார்ந்த பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஆஸ்துமா, மூட்டு அழற்சி, பூஞ்சை தொற்று ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கான மூலக்கூறுகளை உருவாக்குவதற்கான வேதி சேர்க்கையில் சில மாற்றங்களை கண்டறிந்தார்.
பசுமை வேதி பொருள்
'பென்சோ - பி - தையோபின்' என்ற மூலக்கூறு உருவாக்கம், ஏற்கனவே நடைமுறையில் உள்ள முறையை காட்டிலும், பல்வேறு வகையில் சிறப்பானதாக அமைந்தது. அதீத வெப்பம் சம்பந்தப்பட்ட மருந்துகளை தயாரிக்க, தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வரும் மூலக்கூறு உருவாக்க முறையால், சுற்றுச்சூழல் மாசு, கடுமையான நெடி மற்றும் அதீத வெப்பம் ஏற்படுகிறது.
சிறப்பம்சங்கள் (Special Features)
பூங்குழலியின் பசுமை தொழில்நுட்பத்திலான மூலக்கூறு சேர்ம முறையானது, குறைந்த அளவிலான நீர் பயன்பாடு, மிக குறைந்த வெப்பநிலை, நெடியின்மை ஆகிய சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இந்த புதிய தொழில்நுட்ப முறைக்கு, மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் காப்புரிமை வழங்கியுள்ளது.
இது குறித்து, பூங்குழலி கூறுகையில், ''அறிவியல் தொழில்நுட்ப துறையும், என் பேராசிரியர்களும் அளித்த ஊக்கத்தின் காரணமாக, இத்தகைய கண்டுபிடிப்பை வெளிக்கொணர முடிந்தது,'' என்றார்.
மேலும் படிக்க
ஒரு வயது சிறுமிக்கு கல்லீரல் தானம்: இந்திய வம்சாவளி இளைஞருக்கு விருது!
Share your comments