1. செய்திகள்

நல்லெண்ணெய், கடலை எண்ணெய் விலை உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி!

R. Balakrishnan
R. Balakrishnan

Oil price hike

விருதுநகர் சந்தையில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அதில், கடந்த வாரம் 15 கிலோ கடலை எண்ணெய் விலை ரூ.2900த்திற்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.2950க்கு விற்கப்படுகிறது. இதேபோல் நல்லெண்ணெய் 15 கிலோ விலையானது கடந்த வாரம் ரூ. 5280க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், திடீரென ரூ.165 உயர்த்தப்பட்டு ரூ.5445க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

விலைவாசி உயர்வு

எண்ணெய் விலை அதிகரித்தாலும் பருப்பு விலை குறைந்துள்ளது. கடந்த வாரம் 100 கிலோ துவரம் பருப்பு ( புதுஸ்நாடு ) ரூ.10200க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.400 குறைந்து ரூ.9800க்கு விற்பனையாகிறது. இதேபோல் புதஸ் லயன் வகை கடந்த வாரம் ரூ.11 ஆயிரத்திற்கு விற்பனையான நிலையில் தற்போது ரூ.400 குறைந்து ரூ.10,600க்கு விற்கப்படுகிறது.

மேலும், பட்டாணி பருப்பு 110 கிலோ கடந்த வாரம் ரூ.6300க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.100 குறைந்து 6200க்கு விற்கப்படுகிறது. இதேபோல், உளுந்து (நாடு) ரூ.8200க்கு விற்பனையான நிலையில் இந்த வாரம் ரூ.400 குறைவு ஏற்பட்டு தற்போது ரூ.7800க்கு விற்கப்படுகிறது. மேலும் பாசிப் பயறு 100 கிலோ ரூ.7ஆயிரத்திற்கு விற்கப்பட்டு வந்தநிலையில், தற்போது ரூ.200 குறைவு ஏற்பட்டு ரூ.6800க்கு விற்கப்படுகிறது.

பாமாயில் விலையானது ஒவ்வொரு வாரமும் சரிவைச் சந்தித்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் 15 கிலோ ரூ.1760க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.160 குறைந்து ரூ.1600க்கு விற்கப்படுகிறது. பிற உணவு பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.

மேலும் படிக்க

நெல் அரிசி ஏற்றுமதி: 20% வரி விதித்தது மத்திய அரசு!

English Summary: Groundnut oil price increase: public shock!

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.