ஹெச் 1 பி விசாவிற்கான விண்ணப்பக் கட்டணத்தை உயர்த்த அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த தகவலினை அந்நாட்டின் தொழிலாளர் துறை அமைச்சர் அலெக்சாண்டர் அகோஸ்டா தெரிவித்தார். இந்த விண்ணப்பக் கட்டண உயர்வு இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களை பெரும் அளவில் பாதிக்கும் எனலாம்.
ஹெச் 1 பி விசா என்பது அமெரிக்க அரசு அந்நாட்டில் பணி புரியும் வெளிநாட்டவருக்கு வழங்கி வருகிறது. தற்போதுள்ள அரசு இந்த விசா நடைமுறையினை நெறி படுத்தவும், அந்நாட்டில் பெருகி வரும் வேலையில்லா திண்டாட்டத்தை சரி செய்யவும் விசாவிற்கான கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. வரும் அக்டோபர் 1ம் தேதி தொடங்கும் 2020ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் இதனை குறித்து விவாதிக்கப்பட்டு செயல் படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று தொழிலாளர் துறையின் அமைச்சர் அகோஸ்டா கூறினார்.
ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சத்திற்கு அதிகமான வெளிநாட்டினர் இந்த ஹெச் 1 பி விசாவிற்காக விண்ணப்பிக்கின்றனர். இதில் விண்ணப்பிக்கும் ஒவ்வொரு ஆயிரம் பேரில் பத்து பேர் இந்தியர்கள். விண்ணப்பிக்கும் நான்கு பேரில் ஒருவருடைய விண்ணப்பம் நிராகரிக்க படுகிறது என்று கூறினார்.
தற்போது 6.5 லட்சம் வெளிநாட்டு பணியாளர்கள் ஹெச் 1 பி விசா மூலம் பணியாற்றி வருகின்றனர். இந்த விசாவிற்கான கால அவகாசம் 6 ஆண்டுகளாக இருந்து வருகிறது.அமெரிக்க இளைஞர்கள் தொழில்நுட்ப பிரிவில் பயிற்சி பெறுவதற்கு அப்ரென்டிஸ் திட்டம் செயல்படுத்த உள்ளது. இதற்கு அரசு 15 கோடி டாலரை முதலீடு செய்ய உள்ளது. இத்திட்டத்துக்கு உதவும் வகையில் விசா விண்ணப்பக் கட்டணத்தை உயர்த்தப் போவதாக அகஸ்டா தெரிவித்தார். இந்த திட்டத்தினை அரசும் மற்றும் தனியார் துறையினரும் இணைந்து செயல்படுத்த உள்ளதாக கூறினார். இதில் தனியாரின் பங்களிப்பு 35 %மகா இருக்கும் என்றார்.
இந்தியா மற்றும் சீனாவிலிருந்து பெருமளவிலானோர் ஹெச் 1 பி விசா பெற்று அமெரிக்காவில் பணி புரிந்து வருகின்றனர். இவர்களில் பெரும் பாலானோர் தகவல் தொழில் நுட்பம், மருத்துவம், கல்வி போன்ற துறை சார்ந்தவர்களே அதிக அளவில் ஹெச் 1 பி விசா பெற்றவர்களாகவும், அதற்காக விண்ணப்பம் செய்பவர்களாகவும் இருந்து வருகின்றனர்.
Share your comments