கொரோனா நெருக்கடியால் சிக்கிய மக்கள் தங்களின் பொருளதார சிக்கலை எதிர்கொள்ள ஏதுவாக வரி செலுத்திய 89 லட்சம் பேருக்கு வருமானவரித்துறை (Income Tax Department) சார்பில் பணம் திரும்ப செலுத்தப்பட்டுள்ளது (Refund).
ரீஃபண்ட் (Refund)
இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், கடந்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்தக் காலத்தில் மக்கள் நிதி நெருக்கடியால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதாரச் சலுகைகள் அறிவிக்கப்பட்டது. மேலும் வங்கிக் கடன் செலுத்துவது, வரி செலுத்துவது போன்றவற்றுக்கான கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டது. அதோடு, வரி செலுத்தியோருக்குத் திரும்பி செலுத்த வேண்டிய ரீஃபண்ட் தொகையையும் வருமான வரித் துறை வேகமாக வழங்கி வருகிறது.
அதன்படி, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 8ஆம் தேதி வரையில் மொத்தம் 89.29 லட்சம் பேருக்கு ரீஃபண்ட் தொகையாக ரூ.1,45,619 கோடியை வழங்கியுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக வரி செலுத்துவோர் வருமான வரி சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகளை மேற்கொள்வதில் சவால்களைச் சந்தித்து வருவதால் கடந்த 2020 மார்ச் 31ஆம் தேதி வரி விதிப்பு மற்றும் பிற சட்டங்களுக்கான அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
அதன்படி பல்வேறு விஷயங்களில் கால வரம்பு நீட்டிக்கப்பட்டு வருகிறது. 2019-20 நிதியாண்டுக்கான வருமான வரி ரிட்டன்களைச் செலுத்துவதற்கான கால அவகாசம் டிசம்பர் 31 வரையில் நீட்டிக்கப்பட்டது.
மேலும் படிக்க....
2020ம் ஆண்டுக்கான தேசிய தண்ணீர் விருதுகள் -விண்ணப்பிக்க அழைப்பு!
சமையல் சிலிண்டருக்கு மாற்றாக மாட்டுச்சாணத்தில் இருந்து Biogas - ரூ.12 ஆயிரம் மானியத்துடன்!
விதைப்பண்ணை அமைத்து கூடுதல் லாபம் ஈட்டலாம்- வேளாண்துறை அறிவுறுத்தல்!
Share your comments