மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் விவசாயிகள் கடந்த ஒரு வாரமாக போராட்டம் செய்து வருகின்றனர். டெல்லியில் மத்திய அமைச்சர்களைச் சந்தித்துப் பேசிய விவசாயிகள், விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum support price) வழங்கும் முறையைப் பாதுகாக்கப் புதிய சட்டத்தை (New law) இயற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
குறைந்தபட்ச ஆதரவு விலை
விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கும் முறைக்குப் புதிய வேளாண் சட்டங்களால் ஆபத்து ஏற்படும் என விவசாயிகள் கருதுகின்றனர். இதனால் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரிப் பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேச மாநில விவசாயிகள் எட்டாம் நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியைச் சுற்றியுள்ள சிங்கு, திக்ரி, காசிப்பூர் ஆகிய இடங்களில் உள்ள சோதனைச் சாவடிகள் (Checkpoints) முன்பு ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பஞ்சாபின் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த மகளிர் கபடி அணியினரும் (Women's Kabaddi Team) சிங்கு என்னுமிடத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
விருதுகள் திரும்ப ஒப்படைப்பு:
விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துப் பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல், மத்திய அரசு தனக்கு வழங்கிய பத்ம விபூசண் விருதைத் (Padma Vibhushan Award) திருப்பி ஒப்படைப்பதாக அறிவித்துள்ளார். இதேபோல் பஞ்சாபைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சுக்தேவ் சிங் திண்ட்சா பத்ம பூசண் (Padma Bhushan) விருதைத் திருப்பி அளிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
புதிய சட்டத்தை இயற்ற வலியுறுத்தல்:
டெல்லி விஞ்ஞான் பவனில் மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல் (Piyush Goyal), இணையமைச்சர் சோம் பிரகாஷ் ஆகியோரை 35 விவசாய சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினர். அப்போது குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கும் முறையைப் பாதுகாப்பதற்குப் புதிய சட்டத்தை இயற்ற வேண்டும் என வலியுறுத்தினர். அமைச்சர்களுடனான சந்திப்பின்போது அரசால் வழங்கப்பட்ட உணவையோ, தேநீரையோ ஏற்றுக்கொள்ளாத விவசாயிகள், தாங்கள் கொண்டு வந்திருந்த உணவையே உண்டனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
வீட்டுத் தோட்டத்திற்கு இயற்கை உரம் வீட்டிலேயே தயாரிக்கலாம்! எப்படின்னு தெரிஞ்சுகோங்க!
விவசாயிகளுக்கு உதவ விஜய் ரசிகர்கள் எடுத்த அசத்தலான முடிவு - பொதுமக்கள் வரவேற்பு!
Share your comments