முன்னணி பொதுத்துறை வங்கியான பாங்க் ஆப் இந்தியா (BOI) வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இந்த புதிய வட்டி மாற்றம் தீபாவளி ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. BOI ஸ்டார் வீட்டுக் கடன் திட்டத்திற்கான வட்டி விகிதங்களைக் குறைப்பதாக பாங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது, இந்த வங்கியில் வீட்டுக்கடன் வட்டி 8.30% தொடங்கி குறைந்த EMIகளுடன் உள்ளது.
அதே போல் மற்ற வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களிடமிருந்து இருக்கும் வீட்டுக் கடன்களையும் வாடிக்கையாளர்கள் பாங்க் ஆஃப் இந்தியாவுக்கு மாற்றலாம். வீட்டுக் கடனுக்கான விண்ணப்பதாரர் ஓவர் டிராஃப்ட் வசதியையும் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட்டி விகிதங்களைக் குறைப்பதுடன், டிசம்பர் 31, 2022 வரை செயலாக்கக் கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் வங்கி கூறியுள்ளது. இந்தச் சலுகை நிலத்தை வாங்க, வீடு கட்ட, புதிய அல்லது பயன்படுத்திய வசிப்பிடத்தைப் பெற அல்லது மறுவடிவமைப்பு அல்லது பழுதுபார்க்க பெறபப்டும் கடன்களில் செல்லுப்படியாகும். ஏற்கனவே உள்ள வீடு அல்லது அபார்ட்மெண்ட் மீதான டாப்-அப் கடனை வங்கி வழங்குகிறது.
இந்தியாவின் ஸ்டார் ஹோம் லோன் 30 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்தும் காலத்தை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் திருப்பிச் செலுத்தும் வகையில் கடன் காலத்தின் போது வெவ்வேறு காலகட்டங்களுக்கு இது பல்வேறு EMI விருப்பங்களையும் வழங்குகிறது. முன்கூட்டியே செலுத்துதல் அல்லது பகுதி-கட்டணக் கட்டணங்கள் வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்படுவதில்லை. அதேபோல் கடனாளிகள் திருப்பிச் செலுத்தப்பட்ட வட்டி மற்றும் தவணைகளில் வரிச் சலுகையைப் பெறுவார்கள். குறைந்த வட்டித் தொகையை அனுமதிக்க வட்டி தினசரி கணக்கிடப்படுகிறது.
இதுகுறித்து ஆன்லைனில் வெளியான அறிவிப்பின் படி பாங்க் ஆஃப் இந்தியா தனது இணையதளத்தில், “வீடு கட்டுவதற்கும் ப்ளாட்டை வாங்குவதற்கும், அத்துடன் புதுப்பித்தல் / பழுதுபார்த்தல் / மாற்றுதல் / சேர்த்தல் போன்றவற்றுக்கும் கடன் வழங்குகிறது. வீடு கட்ட அதிகபட்ச கடன் தொகை மற்றும் நியாயமான செயலாக்கக் கட்டணங்களுடன் 30 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்தும் வரம்புகள். உறுதி/நிர்வாகக் கட்டணங்கள் இல்லை." உங்கள் கனவு இல்லத்திற்குக் கடனைப் பெற, 8010968305 என்ற எண்ணில் மிஸ்டு கால் அல்லது 7669300024 என்ற எண்ணுக்கு என SMS அனுப்பவும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:
Share your comments