1. செய்திகள்

குரூப் 2 ரிசல்ட் தாமதம் ஏன்? - டி.என்.பி.எஸ்.சி விளக்கம்

T. Vigneshwaran
T. Vigneshwaran
TNPSC

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பெண்கள் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற மென்பொருளில் உரிய மாற்றங்கள் செய்யப்பட்டு நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும், அப்பணி நிறைவுற்ற பின்னர் குரூப் 2 தேர்வின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஒருங்கிணைந்த குடிமை பணிகளுக்கான குரூப் 2 தேர்வுக்கான முதல்நிலை எழுத்து தேர்வு கடந்த 21.05.2022 அன்று நடைபெற்றது. இதற்கிடையே மகளிருக்கான இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன.

இந்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பினை வழங்கிய நிலையில் அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு கட்ட கலந்தாலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணைகளை செயல்படுத்துவது தொடர்பாக மென்பொருளில் உரிய மாற்றங்கள் செய்யும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. அப்பணி நிறைவுற்ற பின்னர் குரூப் 2 தேர்வின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக சமூக ஊடகங்களில் வெளிவரும் ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம். அதிகாரப்பூர்வ தகவல்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:

பக்கத்தில் செல்போனை வைத்துக்கொண்டு தூங்குபவரா நீங்கள்

உடல் எடை குறைய முட்டை வெள்ளை கரு

English Summary: Why delay in group 2 result? - TNPSC Explanation Published on: 28 October 2022, 08:09 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.