மத்திய அரசின் சார்பில், ரேஷனில் வழங்கப்படும் கூடுதல் இலவச அரிசி (Free rice), கோதுமை வாங்க, ஒன்பதுநாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது.
இலவச அரிசி
கொரோனா தொற்று பரவலை தடுக்க, நாடு முழுதும், மார்ச் இறுதியில் ஊரடங்கு (Lockdown) அமலானது.அதனால், முன்னுரிமை, அந்தியோதயா கார்டுதாரர்களுக்கு, ரேஷன் கடைகளில், ஏப்ரல் முதல் நவம்பர் வரை, ஏற்கனவே வழங்குவதுடன், கார்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும், கூடுதலாக, தலா, 5 கிலோ அரிசி இலவசமாக வழங்குமாறு, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டது. தமிழக அரசு, அரிசி பிரிவில் உள்ள அனைத்து கார்டுதாரர்களுக்கும், ஏற்கனவே வழங்கும் இலவச அரிசியுடன், கார்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் கூடுதலாக, தலா, 5 கிலோ அரிசி வழங்கி வருகிறது. மேலும், மத்திய அரசின் உத்தரவை பின்பற்றி, தமிழகத்தில், ஜூலை முதல் இம்மாதம் வரை, முன்னுரிமை, அந்தியோதயா கார்டு தாரருக்கு மட்டும், தலா, 1 கிலோ கோதுமை (Wheat) இலவசமாக வழங்கப்படுகிறது.
9 நாட்கள் அவகாசம்:
மத்திய அரசின் கூடுதல் அரிசி, கோதுமை வழங்கும் திட்டம் முடிய, இன்னும், ஒன்பது நாட்களே அவகாசம் உள்ளது. தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றது, மழை உள்ளிட்ட காரணங்களால், பலர் ரேஷனில், இலவச அரிசியை வாங்காமல் உள்ளனர். இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இலவசமாக வழங்கப்படும் அரிசிக்காக, மத்திய, மாநில அரசுகள், பல நுாறு கோடி ரூபாய் செலவு செய்கின்றன. 'எனவே, இதுவரை, இம்மாதத்திற்கான அரிசியை வாங்காமல் இருப்போர், விரைவாக சென்று அவற்றை வாங்கலாம்' என்றார்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
ரேஷன் கடைகளில் பெல்லாரி வெங்காயம் விற்பனை! விலை என்னவாக இருக்கும்?
Share your comments