வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. சென்னை உள்ளிட்ட நகரங்களில் நேற்று மாலையிலிருந்து தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
விடுமுறை (Leave)
கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று ஒரு நாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் நேற்று இரவு அறிவிப்பு வெளியிட்டனர்.
கனமழை (Heavy Rain)
இந்நிலையில் கனமழை காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் படிக்க
பெற்றோர்களே உஷார்: ஜங் ஃபுட் உணவுகளால் குழந்தைகளுக்கு ஆபத்து!
விவசாயிகளே கொஞ்சம் கவனியுங்கள்: நவம்பர் 1 இல் இதைச் செய்ய வேண்டும்!
Share your comments