அடுத்த 3 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அடுத்த 3 மணி நேரத்திற்கு தர்மபுரி, திண்டுக்கல், ராமநாதபுரம், நாமக்கல், ஈரோடு, பெரம்பலூர், சிவகங்கை ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. குற்றாலத்தில் அருவிகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை
தேனி மாவட்டத்தில் உள்ள மஞ்சள் ஆற்று அணை தனது முழு கொள்ளளவான 57 அடிக்கு தற்போது வரையில் 53 அடியை நெருங்கி வருகிறது. இதனையடுத்து ஆற்றின் கரை யோர மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
முன்னதாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், வட தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
வானிலை முன்னறிவிப்பு (Weather Forecast)
அடுத்த 24 மணிநேரத்தில் தென் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், வட தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சிலஇடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning to fishermen)
18ம் தேதி மாலத்தீவு, கேரள கடற்பகுதி, லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
கூடுதல் மகசூலுக்கு பறவைகளும் முக்கியமே !
பயிருக்கு உயிரூட்டும் தயிர்- பொன்னியமாக மாற்றி யூரியாவிற்கு பதிலாக பயன்படுத்தலாம்!
Share your comments