காற்றின் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில், இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
காற்றின் சுழற்சி (Circulation of air)
இலங்கை மற்றும் குமரிக்கடல் 1.5 கிலோ மீட்டர் உயரத்தில் காற்றின் சுழற்சி வடக்கு கேரள பகுதி வரை நீடிக்கிறது.
கனமழை (Heavy rain)
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
மிதமான மழை (Moderate rain)
இதேபோல் தென் தமிழகத்தில் திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். காலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும் அதன்பிறகு தெளிவாகக் காணப்படும்.
வானிலை முன்னறிவிப்பு (Weather Forecast)
12.03.21
தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
13.03.2021 முதல் 15.03.21 வரை
தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னை (Chennai)
சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு முற்பகலில் வாகனம் ஓரளவு மேகமூட்டத்துடனும், அதன்பிறகு தெளிவாகவும் காணப்படும்.
வெப்பநிலை (Temperature)
அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.
மழைபதிவு (Rainfall)
கடந்த 24 மணி நேரத்தைப் பொருத்தவரை நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 12 சென்டிமீட்டரும், தென்காசி மாவட்டம் சிவகிரி, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் தலா 9 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning to fishermen)
இன்று வடகேரளா மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வெப்பச்சலனம் காரணமாக இடி மழையுடன் கூடிய சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் படிக்க...
சென்னையில் பிடிபடும் 80 சதவீத மீன்களில் பிளாஸ்டிக் துகள்கள்! அதிர்ச்சி தகவல்!
கோடையில் நீர்ச்சத்து இழப்பை ஈடு செய்ய பதநீர் குடியுங்கள்!
மார்ச் 26-இல் மீண்டும் பாரத் பந்த்! விவசாயிகளுக்கு அழைப்பு
Share your comments