தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் தற்போது நிலவி வரும் வெப்பச்சலனம் காரணமாக இடி, மின்னலுடன் கூடிய கனமழையும் ஒரு சில இடங்களை பொருத்தவரை லேசான மழையும் பெய்து வருகிறது.
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமாக மழை பெய்யும் என இன்று வெளியிட்டுள்ள வானிலை ஆய்வு மைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மற்றும் நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோயம்புத்தூர் தேனி, திண்டுக்கல், தென்காசி, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்கள் அவற்றை தொடர்ந்து புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதற்கிடையில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக் கல்லாறில் 9 செமீ மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதை தொடர்ந்து தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைப் பொறுத்த வரை பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மிதமான மற்றும் கனமழை பெய்து வருகிறது. அதாவது சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்தது.
தமிழகத்தின் சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், சென்னையின் ஒருசில பகுதிகளில் இன்று அதிகாலை முதல் லேசான மழை பெய்கிறது. வரும் ஜூலை 18ஆம் தேதி வரை மத்திய, தென் மேற்கு மற்றும் வட கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் மேலும் காற்று வீசுவதற்கு இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க:
4 மாவட்டங்களில் கொட்ட போகும் கனமழை-கோடை கால வானிலை நிலவரம் -12/07/21 -July
Share your comments