தமிழகத்தில் தென் மேற்கு பருவ காற்று வலுவடைந்ததை தொடர்ந்து மீண்டும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கோவை நீலகிரி, தேனி மாவட்டங்களில் பலத்த மழை பெய்து நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளன.
தென் மேற்கு பருவ காற்று காரணமாக கடந்த ஒரு வாரமாக தமிழகதில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் கனமழையும், மற்ற சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவிலிருந்து இன்று காலை வரை தொடர்ந்து பரவலாக மழை பெய்தது. இதே போல் வேலூர் மாவட்டத்திலும் நேற்று நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், நெல்லை, காஞ்சிபுரம், திண்டுக்கல், தர்மபுரி, தஞ்சாவூர், உட்பட 22 மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை ஒரு சில இடங்களில் லேசான மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அதிக பட்ச வெப்பநிலையாக 36 டிகிரியும், குறைந்த பட்ச வெப்பநிலையாக 27 டிகிரியும் பதிவாகக் கூடும். நேற்றைய நிலவரம் படி சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலான மழை பதிவாகியுள்ளது. மேலும் அண்ணாநகர், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, கிண்டி, அண்ணா சாலை, நங்கநல்லூர், மடிப்பாக்கம், போரூர், வளசரவாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று காலை வரை பலத்தை மழை பெய்தது.
K.Sakthipriya
Krishi Jagran
Share your comments