வடமாநிலங்களில் பயிர்களை நாசமாக்கும் பாலைவன வெட்டுக்கிளிகளை ஹெலிகாப்டர் மூலம் மருந்து அடிக்கும் ஓழிக்கும் பணிகளை மத்திய வேளாண்மைத்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.
இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் தனது கோரத் தாண்டவத்தை ஆடி வருகிறது. இதனுடன் இன்னொரு புறம் வடமாநிலங்களில், பாலைவன வெட்டுக்கிளிகள் விளைநிலைங்களை நாசம் செய்து வருகின்றன. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
பாலைவன வெட்டுக்கிளிகள் (Locust)
ஈரான், பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த பாலைவன வெட்டுக்கிளிகள், முதலில் ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் விளை நிலங்களை நாசப்படுத்தின. இதைத்தொடர்ந்து மஹாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் உத்திரபிரதேச மாநிலங்களில் ஊடுருவி பயிர்களை சேதப்படுத்தின
இதனால் இந்த வெட்டுக்கிளிகள் பிரச்னை கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மத்திய- மாநில அரசுகளுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
ஹெலிகாப்டர்களை ஈதுபடுத்த முடிவு
வயல்வெளிகளில் சுற்றித் திரிந்த வெட்டுக்கிளிகள், அடுத்தகட்டமாக தலைநகர் டெல்லிக்கு அருகே உள்ள குரு கிராமில் அண்மையில் ஊடுருவின. அவற்றை அப்புறப்படுத்தும் வகையில், மாவட்ட நிர்வாகம் டிராக்டர் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க நடவடிக்கை மேற்கொண்டது. எனினும் போதிய பலன் கிடைக்காததால், தற்போது வெட்டுக்கிளிகளுக்கு எதிராக போராடும் பணியில், மத்திய வேளாண்துறை அமைச்சகம், ஹெலிகாப்டர்களைப் புகுத்தியுள்ளது.
அதன்படி, உத்திரப் பிரதேசத்தின் நோய்டாவில், மருந்து தெளிக்கும் வசதி கொண்ட கருவிகளை உள்ளடக்கிய ஹெலிகாப்டர்கள் மூலம் வெட்டுக்கிளிகளை அப்புறப்படுத்தும் பணியை, மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தொடங்கிவைத்தார்.
இந்த ஹெலிகாப்டர்கள், பார்மர், ஜெய்சால்மர், பைக்கனூர், ஜோத்பூர் மற்றும் நாக்பூர் பகுதிகளில் வெட்டுக்கிளிகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.
ஒரு ஹெலிகாப்டர், ஒரு முறையில், சுமார் 25 முதல் 50 ஹெக்டர் பரப்பில், 250 லிட்டர் மருந்தைத் தெளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான போக்குவரத்து துறை அனுமதி
விமான போக்குவரத்து துறை அமைச்சகம் (Ministry of Civil Aviation) மற்றும் DGCA அனுமதியுடன் இந்த பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்தும் பணியில், ட்ரோன் (Drons)எனப்படும் அளில்லாத விமானம் ஏற்கனவே ஈடுபடுத்தப்பட்ட நிலையில், தற்போது ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Elavarase sivakumar
Krishi Jagran
இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்!!
லாக்டவுன் நேரத்தில் குழந்தைகளை சுறு சுறுப்பாக வைத்துக்கொள்வது எப்படி?
Share your comments