1. Blogs

தனிமையில் தவிக்கும் குழந்தைகள் - லாக்டவுன் ஐடியாக்கள்!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

நாடு முழுவதும் கொரோனா தொற்று மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால் பெரும்பாலான பெற்றோர்கள் தங்களில் வீடுகளில் முடங்கி உள்ளனர். வேலையில்லாமை, அல்லது வொர்க் ஃப்ரம் ஹோம் (Work From Home) போன்ற பிரச்னைகளுக்கு மத்தியில் பெரும்பாலான குடும்பங்களில் குழந்தைகளை சாமாளிப்பது என்பது பெரும் பேசுபொருளாக இருந்து வருகிறது.

குழந்தைகளின் செயல்பாடுகள்

இத்தகைய சூழலில் வீட்டில் இருக்கும் பெரும்பாலான குழந்தைகள் தொலைக்காட்சியில் தங்களது நேரத்தை அதிகம் செலவிடுவதாகவும், ஆன்லைனில் வீடியோக்களைப் பார்ப்பது, வீடியோ கேம்களை விளையாடுவது, மொபைல்களில் அதிக செலவிடுகிறார்கள் என தாய்மார்கள் புலம்பி வருகின்றனர். தங்கள் வீட்டு வேலைகளைத் தொடர குழந்தைகளை சரிவர கவனிக்கவும் தவறி விடுகின்றனர்.

இது போன்ற விளையாட்டுகள் குழந்தைகளின் நேரத்தை கடத்த உதவி செய்யலாம், ஆனால் இது உண்மையில் குழந்தைகளுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. எனவே இது போன்ற சூழ்நிலைகளில் பொற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் செயல்பாடுகள் மீது அதிக கவனம் செலுத்துவதும் அவசியமாகிறது.

இந்த லாக்டவுன் நேரத்தை, குழந்தைகளுடன் சிறது நேரம் செலவிட்டு அவர்களின் குணநலன்களை மேம்படுத்த நாம் பயன்படுத்தலாம். வீட்டில் குழந்தைகளின் நேரத்தை ஆக்கப்பூர்வமாக எப்படி செலவிடுவது என்பது பற்றி நாம் பார்ப்போம்.

நேரத்தை கடைப்பிடிப்பது

பள்ளிக்கூடங்கள் இல்லாததால் குழந்தைகளின் அன்றாட பழக்கவழங்கங்கள் மாறுபட வாய்ப்பு உண்டு, காலையில் அதிக நேரம் தூங்குதல், முறையான நேரத்தில் உணவு போன்ற விஷயங்களை முதலில் சரி செய்ய வேண்டும். பின், குழந்தைகளுக்கு என பிரத்யேகமாக அட்டவணை ஒன்று தயார் செய்து அதில் அவர்கள் அன்றாடம் மேற்கொள்ள வேண்டிய சின்ன சின்ன விஷயங்களை பட்டியலிடுங்கள். இது உங்கள் குழந்தைகளின் எதிர் காலத்திற்கு உதவும்.

உடற்பயிற்சி மற்றும் யோகாசனம்

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடற்பயிற்சி மற்றும் யோகசனங்கள் மிகவும் அவசியம். உங்களின் குழந்தைகளுக்கு இதில் ஏதாவது ஒன்றை பழக்கப்படுத்தலாம் (அல்லது இரண்டுக்கும் நேரம் ஒதுக்கினாலும் சிறந்தது). சிறு சிறு உடற்பயிற்சிகள் மற்றும் மூச்சுபயிற்சி போன்ற யோகாசனங்களால் உடல் வலிமையுடன் மன வலிமையும் கிடைக்கிறது. மேலும், குழந்தைகளின் சிந்தனைத் திறன் அதிகரித்து ஞாபக சக்தியும் கூடுகிறது.

எனவே குழந்தைகளுக்கு ஏற்ற உடற்பயிற்சி அல்லது யோகாசனங்களை கற்றுத்தரலாம். இதற்கு உதவும் வகையில் நிறைய யூட்யூப் வீடியோக்கள் உங்களுக்கு கிடைக்கின்றன.

Credit by : PTTV

மூளைக்கு வேலைகொடுங்கள்

குழந்தைகளை டிவி வீடியோ கேம்களில் இருந்து திசை திருப்ப எளிய வழி அவர்களுக்கு பிடித்த விஷயங்களை செய்ய வைப்பது தான். குழந்தைகளுக்கு, செஸ் விளையாட்டு, கியூபிக் வண்ணம் சேர்த்தல், குறுக்கெழுத்துப் போட்டி போன்ற மூளை சார்ந்த விளையாட்டுகளில் அதிக கவனம் செலுத்த விடுவது நல்லது. மேலும் குழந்தைகளின் ஆற்றல் எதில் அதிகம் உள்ளது என்பதை கவனித்து அதன் மீது இன்னும் அதிக கவனம் செலுத்த முயற்சி செய்யுங்கள்.

வீட்டுவேலைகளை கற்றுக்கொடுங்கள்

ஆண் குழந்தை என்றாலும் சரி, பெண் குழந்தை என்றாலும் சரி, சின்ன சின்ன வீட்டுவேலைகளை சொல்லி கொடுத்து வளருங்கள். விவரம் அறிந்த பள்ளி குழந்தைளுக்கு சிறு வேலைகளை கற்று தரலாம்.

துணி மடிப்பது, வீட்டை சுத்தம் செய்வது, போன்ற வேலைகளை அவ்வப்போது சொல்லி கொடுங்கள், இதனால் குழந்தைகளுக்கு ஆரம்பம் முதலே குடும்பத்தின் மீதும், பெற்றோர்களின் அர்பனிப்பு மீதும் அன்பு இருக்கும்.

நீதிக் கதைகள் சொல்லுங்கள்

உங்களின் இரவு நேரத்தை குழந்தைகளுடன் செலவிடுங்கள். குழந்தைகள் நேர்மையான எண்ணத்துடன் வளர அதிக நீதி கதைகளை போதியுங்கள், அதோடு அறிவியல் புனைக் கதைகளையும் கூறுங்கள். இதனால் குழந்தைகளின் கற்பனைத் திறன் மேம்படும். மேலும் குழந்தைளுக்கு அறிவு மற்றும் ஆற்றல்களை விரிவு படுத்தும் வகையில் பொது அறிவு தொடர்பான கேள்வி பதில்களை சொல்லிக்கொடுங்கள்

DIY உடன் படைப்பாற்றல் பெறுங்கள்

பேப்பர்கள், பசை, கிரேயன்கள், பலூன்கள் போன்றவை குழந்தைகளை பிஸியாக வைத்திருக்க இது ஒரு எளிதான வழியாகும். நீங்கள் அவர்களுக்கு பணிகளை வழங்கலாம் மற்றும் அதிலிருந்து ஆக்கபூர்வமான ஒன்றை உருவாக்க அவர்களை ஊக்குவிக்கலாம். இந்த நடவடிக்கைகளில் அவர்களின் தன்நம்பிக்கையையும் ஆர்வத்தையும் அதிகரிக்க நீங்கள் அவர்களுக்கு சிறிய பரிசுகளையும் வழங்கலாம்.

மேலும் படிக்க..

இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்!!

ஆரோக்கியம் முதல் அழகு வரை அனைத்திற்கும் தேன்!!

தமிழகத்தில் ஜூலை 31-ந்தேதி வரை மீண்டும் ஊரடங்கு: தமிழக அரசு அறிவிப்பு!

English Summary: Here are some activities to keep your kids busy during lockdown Published on: 30 June 2020, 04:25 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.