வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள நிவர் புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயல் சென்னை அருகே கரையை கடக்கவுள்ள நிலையில் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் (Nivar cyclone) அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் சென்னையிலிருந்து சுமார் 400 கிமீ தொலைவில் மையம்கொண்டுள்ளது. நிவர் புயல் மகாபலிபுரம் - காரைக்கால் இடையை கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதையொட்டி, சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. புயல் கடந்த பின்னரும் அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்று வீசும்
நிவர் புயல் கரையை கடக்கும் வேளையில் மணிக்கு 140கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும், சூறைக்காற்றோடு கூடிய கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது. கடல் அலைகள் வழக்கத்தை விட 2 மடங்கு ஆக்ரோஷமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அரசு விடுமுறை
நிவர் புயல் காரணமாக பொதுவிடுமுறையை அறிவித்து தமிழக அரசு உத்தவிட்டுள்ளது. தென்மாவட்டங்களுக்கும், டெல்டா மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்காது என்றும் அறிவித்துள்ளது. சென்னை- குமரி இடையிலான ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வேயும் தெரிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
புயலையொட்டி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது . அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தயாரிநிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புயல் கரையை கடக்கும் சமயத்தில் பாதுகாப்பு நடவடிக்கை கருதி மின்சாரம் துண்டிக்கப்படும் என்றும், புயல் காற்று தாக்கி சேதமையும் மின்கம்பங்களை உடனடியாக மாற்ற அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலையில் உள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
நிவர் புயல் நாளை கரையைக் கடப்பதால் மக்கள் யாரும் வெளிவர வேண்டாம்! முதல்வர் அறிவிப்பு!
தயார் நிலையில் பேரிடர் மீட்பு படை
புயலை எதிர்கொள்ள இந்திய கடற்படை தயாராக உள்ளது. 5 வெள்ள நிவாரண குழுக்கள் மற்றும் ஒரு டைவிங் குழு சென்னையில் தயாராக உள்ளது. மேலும், நாகப்பட்டினம், ராமேஸ்வரம் மற்றும் ஐ.என்.எஸ். பருந்து கடற்படை தளம் ஆகிய பகுதிகளில் கடற்படைப் பிரிவை சேர்ந்த வெள்ள நிவாரணக் குழு தயாராக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விசாகப்பட்டினத்தில் கடற்படையை சேர்ந்த கப்பல் ஐ.என்.எஸ் ஜோதி தேவைக்கேற்ப உதவிகளைச் செய்ய அனுப்பி வைக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க..
Nivar cyclone : புயல் காற்றில் இருந்து தென்னை மரங்களை பாதுகாப்பது எப்படி?
புயல் எச்சரிக்கை : பயிர் இழப்பை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் - வேளாண் துறை!!
மழையில் நனைந்த உலர் தீவனங்களை கால்நடைகளுக்கு வழங்கக்கூடாது!
Share your comments