1. செய்திகள்

தவணை முறையில் அதிக திறன் கொண்ட மின்மோட்டார்! அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு அழைப்பு!

KJ Staff
KJ Staff

அரிசி ஆலைகளில், எனர்ஜி எபிஷியன்சி (Energy Efficiency) நிறுவனம், மின் சிக்கனத்தை கடைப்பிடிப்பதற்காக, குறைந்த மின்சாரத்தில், அதிக திறனில் செயல்பட கூடிய மோட்டார்களை பொருத்த முடிவுசெய்துள்ளது.

அதிக திறன் வாய்ந்த மோட்டார்:

மத்திய அரசின், 'எனர்ஜி எபிஷியன்சி' நிறுவனம், தமிழக மின் வாரிய அலுவலகங்களுக்கு அருகில், குறைந்த மின்சாரத்தில் இயங்கும், எல்.இ.டி. பல்பு, டியூப் லைட், மின் விசிறி உள்ளிட்ட சாதனங்களை விற்பனை (Sales) செய்கிறது. அவற்றின் விலை, வெளிச்சந்தையை விட குறைவு. தற்போது, அந்நிறுவனம், அரிசி ஆலைகளில் (Rice mills), அதிக திறனில் செயல்பட கூடிய மோட்டார்களை (Motors) பொருத்த முடிவு செய்துள்ளது.

அரிசி ஆலைகளில் மோட்டார்:

பல அரிசி ஆலைகளில் உள்ள மோட்டார்களை நிறுவி, அதிக ஆண்டுகள் ஆவதால், அவற்றை இயக்கும் போது, அதிக மின்சாரம் (Electricity) செலவாகிறது. எங்கள் நிறுவனம் சார்பில், பழைய மோட்டாரை எடுத்து விட்டு, குறைந்த மின்சாரத்தில், அதிக திறனில் செயல்பட கூடிய மோட்டாரை பொருத்த முடிவு செய்துள்ளோம். அதன் விலையும், வெளிச்சந்தையை விட, 40 சதவீதம் குறைவு. இதற்காக ஏற்படும் செலவை, ஆலையின் உரிமையாளர், தவணை முறையில் (Installment method) வழங்கலாம். திருவண்ணாமலை, வேலுாரில், அதிக அரிசி ஆலைகள் உள்ளதால், அங்கு, அதிக திறன் உடைய மோட்டார்கள் பொருத்த முடிவு செய்த நிலையில், ஊரடங்கால் (Lockdown), அந்த பணி பாதித்தது. தற்போது, மீண்டும் அந்த பணி துவங்கியுள்ளது என்று எனர்ஜி எபிஷியன்சி நிறுவன அதிகாரி ஒருவர் கூறினார்.

மின்சார செலவு குறைவு:

அதிக திறன் கொண்ட மோட்டார்களை, அரிசி ஆலைகளில் பயன்படுத்தினால் மின்சாரப் பயன்பாடும் குறையும். அதோடு மின்சாரக் கட்டணமும் (electricity bills) குறையும். மோட்டார்களை வாங்கிய பின்பு, தவணை முறையில் அதற்கானத் தொகையை திருப்பி அளிக்கும் வசதி உள்ளதால், வாங்கும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எளிதாக இருக்கும்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடும் மூலிகை சந்தை! காடுகளில் மூலிகை சேகரிப்பு!

சினை நிற்காமல் போன கால்நடைகள்! சினை பிடிக்க இயற்கை மருத்துவம்!

English Summary: High-capacity electric motor in installments! Call for rice mill owners! Published on: 16 November 2020, 08:05 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.