அடுத்த ஐந்து நாட்களுக்கு வடமேற்கு, மேற்கு, மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என்று IMD தெரிவித்துள்ளது.
குஜராத், தெலுங்கானா, ஒடிசா மற்றும் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரின் சில பகுதிகளில் ஏற்கனவே வெப்பநிலை 35-37 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது. இந்த அதிக வெப்பநிலை கோதுமை விளைச்சலை பாதிக்கக்கூடும் என கருதப்படுகிறது. தற்போது பல்வேறு மாநிலங்களில் கோதுமை பயிரானது பூக்கும் பருவத்தை நெருங்க உள்ளது. தற்போது வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பின், அது பயிர் விளைச்சல் மற்றும் முளைப்புத்திறனை வெகுவாக பாதிக்கும். கோதுமையினை போன்று தோட்டக்கலை வகையிலான மற்ற பயிர்களும் வெப்பநிலையால் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது என IMD தகவல் தெரிவித்துள்ளது.
கடந்தாண்டும் இதே போல் மார்ச் மாதம் வீசிய வெப்ப அலையிலான கோதுமை பயிர்கள் சேதமடைந்து வடக்கு மற்றும் மத்திய மாநிலங்களில் விளைச்சலை குறைத்தது. இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்க தேவையான லேசான நீர்ப்பாசன வழிமுறைகளை பயன்படுத்தவும், மண்ணின் ஈரப்பதத்தை தக்க வைக்கவும், வெப்பநிலையிலிருந்து காய்கறிகளை பாதுகாக்கவும் இரண்டு வரிசை கொண்ட காய்கறி பயிர்களுக்கு இடையே தழைச்சத்து பொருட்களை சேர்க்கவும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் மொத்த கோதுமை உற்பத்தியில் 30 விழுக்காட்டைக் கொண்டுள்ள உத்தரப் பிரதேசத்தில், காரீஃப் நெல் அறுவடைக்குப் பிறகு சரியான நேரத்தில் கோதுமை விதைப்பதால், கிழக்குப் பகுதியில் ஒப்பீட்டளவில் நல்ல மகசூல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம் மேற்கு உ.பி,யில் தாமதமாக விதைப்பதால் முக்கியமாக கரும்பு பயிரிடப்படும் பகுதியில் மார்ச் மாதம் வழக்கத்திற்கு மாறாக வெப்பநிலை அதிகரித்தால் மகசூல் சரிவை காணவும் வாய்ப்புள்ளது. அடுத்த ஐந்து நாட்களுக்கு வடமேற்கு, மேற்கு, மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என்று IMD தெரிவித்துள்ளது.
இந்தியாவின் கோதுமை உற்பத்தியில் 25 சதவீதத்தைக் கொண்டுள்ள பஞ்சாப் மற்றும் ஹரியானாவில், தாமதமாக விதைக்கப்பட்ட கோதுமை பூக்கும் நிலையில் உள்ளது. இந்த தருணத்தில் வெப்பநிலை அதிகரிப்பு தானிய உற்பத்தி பாதிப்பை ஏற்படுத்தும். கடந்த 20 நாட்களாக கோதுமை விலை வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், இந்த உயர் வெப்பநிலை அடுத்த 20 நாட்களுக்கு நீடித்தால், விலையில் மாற்றம் ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கோதுமை பயிர்களில் வெப்பநிலை அதிகரிப்பதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை மதிப்பிடுவதற்கும் விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்கும் அரசாங்கம் ஒரு குழுவை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள மதிப்பீட்டின்படி, 2022-23 பயிர் ஆண்டில் (ஜூலை-ஜூன்) 112.18 மில்லியன் டன் கோதுமையை இந்தியா அறுவடை செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் காண்க:
நெருங்கும் கோடைக்காலம்.. வண்டல் மண் எடுக்க அனுமதி- விண்ணப்பிப்பது எப்படி?
பறவைக்காய்ச்சல் எதிரொலி- கோழி மற்றும் வாத்து இறைச்சிக்கு தடை
Share your comments