
ஹோண்டா நிறுவனம் இந்திய இருசக்கர வாகன சந்தையில் வெகு விரைவில் புதுமுக இருசக்கர வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா வெகு விரைவில் 125 சிசி ஸ்கூட்டர் மற்றும் இரண்டு மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 160 சிசி பிரிவிலும், மற்றொன்று 300 சிசி அல்லது 350 சிசி இருசக்கர வாகன பிரிவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது, இந்தியாவின் 150 சிசி - 200 சிசி இருசக்கர வாகன பிரிவில் பஜாஜ் நிறுவனமே முன்னணி பிராண்டாக இருக்கின்றது. நிறுவனத்தின் பல்சர் பைக்கே இந்த பிரிவில் கெத்துக் காட்டிக் கொண்டிருக்கின்றது.
Share your comments