MFOI 2024 Road Show
  1. செய்திகள்

தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு வெயில் நீடிக்கும், சில இடங்களில் கன மழைக்கும் வாய்ப்பு!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் நீடிக்கும் என்றும், ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழைக்கு வாய்ப்பு

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெப்பச்சலனம் மற்றும் உள் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், சேலம், நாமக்கல், ஈரோடு, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று, ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண் வானிலையே நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலூடன் கூடிய லேசானது முதல் மிதாமன மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண் வானிலையே நிலவும்

வரும் ஜூன் 3 மற்றும் 4ம் தேதிகளில் வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

வரும் ஜூன் 5ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பநிலை முன்னறிவிப்பு

அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மதுரை, திருச்சி, கிருஷ்ணகிரி, தர்ம்புரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர்,சென்னை, கடலூர், புதுவை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்கள் எச்சரிக்கை

  • இன்று முதல் வரும் 3ம் தேதி வரை குமரிக்கடல் மற்றும் இலங்கையின் தெற்கு கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீச்க்கூடும்

  • இன்று முதல் வரும் 3ம் தேதி வரை கேரளா கடலோர பகுதிகள் லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்

  • இன்று முதல் வரும் 5ம் தேதி வரை தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்

இதனால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் படிக்க....

ரேஷன் பொருட்களை பெற இன்று முதல் டோக்கன் விநியோகம் தொடக்கம்!!

கொரோனா வைரஸ்ஸை ஒழிக்கும் கத்திரிக்காய் சொட்டு மருந்து- ஆந்திர அரசு அனுமதி!

8 ஆசிய சிங்கங்களுக்கும் கொரோனா- தனி கூண்டில் தனிமைப்படுத்தப்பட்டன!

English Summary: Hot wave continues in Tamil Nadu for next 2 days also there is a chance of heavy rain in some places Published on: 01 June 2021, 03:23 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.