1. செய்திகள்

Hotel Management: தாட்கோ மூலம் வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு! விவரம் உள்ளே

Deiva Bindhiya
Deiva Bindhiya
Hotel Management: Graduate with Employability by TAHDCO! Detail inside

சென்னை தரமணியில் உள்ள ஹோட்டல் மேனேஜ்மென்ட் அன்ட் கேட்டரிங் டெக்னாலஜியில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ/மாணவியருக்கு தாட்கோ மூலம் வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்பு படிக்க வாய்ப்பு.

சென்னை தரமணியிலுள்ள Institute OF Hotel Management Catering Technology & Applied Nutrition நிறுவனமானது ISO 9001:2015 தரச் சான்று பெற்ற நிறுவனமாகும். இந் நிறுவனமானது ஒன்றிய அரசின் சுற்றுலா துறையின் கீழ் அமைய பெற்ற ஒரு தன்னாட்சி நிறுவனம். மேலும் இந்நிறுவனம் சர்வதேச அங்கீகாரம் பெற்றது. American Council Of Business-ஆல் அங்கிரிக்கப்பட்டுள்ளது. France நாட்டில் உள்ள Lycee Nicolas Appert Catering நிறுவனத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. Hotel Management Institute Survey 2021-ன் படி உலகளாவிய மனித வள மேம்பாட்டு மையத்தில் 2வது இடம் பெற்றுள்ளது. CEO WORLD MAGAZINE நடத்திய உலகளவில் சிறந்த விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் மேலாண்மை பள்ளிகளில் உலக தர வரிசையில் மொத்தம் 100 நிறுவனங்களில் 14வது இடத்தில் இடம் பெற்றுள்ளது.

இப்புகழ் பெற்ற நிறுவனத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ/ மாணவியருக்கு B.Sc., (Hospitality & Hotel Administration) மூன்று வருட முழு நேர பட்டபடிப்பும், ஒன்றறை ஆண்டு முழுநேர உணவு தயாரிப்பு (Diploma In Food Production) பட்டயப் படிப்பும், மேலும் 10ஆம் வகுப்பு முடித்த மாணவ மாணவியர்களுக்கு ஒன்றறை ஆண்டுகள் உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல் கைவினைஞர் (Cratsmanship Course In Food Production & Patisserie) பற்றிய படிப்பும் படிக்கலாம். படிப்பு முடிந்தவுடன் நட்சத்திர விடுதிகள், விமானம் நிறுவனம், கப்பல் நிறுவனம், சேவை நிறுவனங்கள் மற்றும் உயர் தர உணவகங்கள் போன்ற இடங்களில் நூறு சதவீதம் வேலை வாய்ப்பு பெற்றிடவும் தாட்கோ ஏற்பாடு செய்துள்ளது. இப்படிப்புக்கான கட்டண தொகையை தாட்கோ கல்விகடனாக வழங்கும்.

இதற்கான தகுதிகள் ஆதிதிரவிடர் மற்றும் பழங்குடியின மாணவ/மாணவிகள் பன்னிரெண்டு மற்றும் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 28 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.25000/- முதல் ரூ.35000/- வரை பெறலாம். பின்னர் திறமைக்கேற்றவாறு ரூ.50000/- முதல் 70000/- வரை ஊதியமாக பெறலாம். இப்படிப்பில் விண்ணப்பம் செய்ய www.tahdco.com என்ற இணையதள முகவரியில் வரும் 14.09.2022க்குள் பதிவு செய்ய வேண்டும்.

மேலும் படிக்க:

போலி உரங்கள், விதைகள் விற்பனை - விவசாயிகளுக்கு எச்சரிக்கை!

TNPSC Group IV: எழுத்துத் தேர்வுக்கு கட்டணமில்லா நேரடி பயிற்சி! விவரம் உள்ளே

English Summary: Hotel Management: Graduate with Employability by TAHDCO! Detail inside Published on: 07 September 2022, 02:34 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.