நம் நாட்டில் 10 ஆண்டுகளில் 17 லட்சத்திற்கும் அதிகமானோர் 'எய்ட்ஸ்' பாதிப்பிற்கு ஆளாகி உள்ளதாக, தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்து உள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திர சேகர் கவுர், நாட்டின் 'எய்ட்ஸ்' பாதிப்பு நிலவரம் குறித்து, தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் விபரம் கோரினார்.
எய்ட்ஸ் (AIDS)
இதற்கு, தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு சமீபத்தில் அளித்த பதில் வருமாறு: நாட்டில், 2011 - 21க்கு இடையே பாதுகாப்பற்ற பாலுறவின் வாயிலாக 17 லட்சத்து 8,777 பேர் எய்ட்ஸ் பாதிப்பிற்கு உள்ளாகினர். மாநில வாரியான பாதிப்பில் ஆந்திரா முதலிடத்தில் உள்ளது. இம்மாநிலத்தில் 10 ஆண்டுகளில் 3.18 லட்சம் பேர் எய்ட்ஸ் பாதிப்பிற்கு உள்ளாகினர்.
அடுத்ததாக மஹாராஷ்டிராவில் 2.84 லட்சம் பேரும், கர்நாடகாவில் 2.12 லட்சம், தமிழகத்தில் 1.16 லட்சம், உத்தர பிரதேசத்தில் 1.10 லட்சம் பேரும் பாதிப்பிற்கு ஆளாகினர்.
அத்துடன், 2011- 21க்கு இடையே இரத்த பரிமாற்றங்களின் வாயிலாக, 15 ஆயிரத்து 782 பேருக்கு எய்ட்ஸ் பரவி உள்ளது. மேலும்,தாயிடம் இருந்து 4,423 குழந்தைகள் இப்பாதிப்பை பெற்றுள்ளனர்.
மேலும் படிக்க
தூய்மைப் பணியாளர்களை காக்குமா தமிழக அரசு: விஷவாயு தாக்கி மூவர் உயிரிழப்பு!
மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் பெற ஸ்மார்ட் அட்டை அவசியம்!
Share your comments