அரசு அலுவலகத்திற்கு சென்று நம்முடைய வேலையை முடிக்க வேண்டுமா? லஞ்சம் கொடுக்காமல் அங்கு ஒரு வேலையும் நடக்காதே என்பதுதான் பலரது புலம்பல், ஏனெனில் ஏதேனும் சான்றிதழ் பெற அவர்கள் பட்டப்பாடு அவர்களுக்கு மட்டுமே தெரியும்.
அரசு நமக்கு வேலை, கொடுத்திருக்கிறது. அதைப் பயன்படுத்திக்கொண்டு, நம் மக்களுக்கு நாம் உதவ வேண்டும் என்றெல்லாம் எந்த அரசு ஊழியரும் நினைப்பதில்லை. பெரும்பாலானோர், நமக்குக் கிடைத்த அரசு வேலையை வைத்துக்கொண்டு எத்தனை லட்சம் சம்பாதிக்கலாம் என்பதிலேயேக் குறியாக இருக்கிறார்கள்.
இவர்களுக்கெல்லாம் லஞ்சம் என்பது தவறு என்பதேத் தெரியாது. தாங்கள் செய்வது நியாயம் என்கிற முறையில், லஞ்சத்தை வழக்கமாக்க மாற்யி இருக்கிறார்கள். இருப்பினும் நாம் யாரிடமும் லஞ்சம் பெறக்கூடாது, அது நமக்கு அவமானம் என்று எண்ணி நாணுபவர்கள் சொற்ப சதவீதமே.
இந்நிலையில், எங்களது லஞ்சம் இவ்வளவுதான் என பட்டியலிட்டு, பேனர் வைத்து லஞ்சத்தொகயை வசூலித்து வருகிறார்கள் திருப்பூர் மாவட்டம் அவினாசியைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொரு சான்றையும் பெற எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது என்று வைக்கப்பட்டுள்ள இந்த பேனரால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சேவைகளை பெறுவதற்கு கிராம நிர்வாக அதிகாரியிடம் சான்று பெற்ற பின்பே விண்ணப்பிக்க முடியும். இதனால் தினந்தோறும் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு சான்றிதழ் தொடர்பாக பொதுமக்கள் செல்கிறார்கள். இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் செம்பியநல்லூர் பகுதியில் அறிவிப்பு பேனர் ஒன்றை யாரோ வைத்துள்ளனர். அதுவும் முக்கிய அறிவிப்பு என்று அந்த பேனரின் தலைப்பில் பெரிய எழுத்துகளில் அச்சிட்டு, அதற்கு கீழ் மணியக்கார அம்மாவிடம்சென்று யாரும் வாக்குவாதம் செய்ய வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
போலீஸில் புகார்
அதன் பின்னர் ஒவ்வொரு சான்றுக்கும் எவ்வளவு லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்று தொகை விவரம் அதில் எழுதப்பட்டுள்ளது.இந்தத் தொகையை கொடுத்தால் மட்டுமே வேலை நடக்கும். மீறி ஏதாவது கேட்டால் உங்கள் மீது போலீசில் புகார் கொடுக்கப்படும் என்றும் அந்த பேனரில் எழுதப்பட்டுள்ளது.
இந்த பேனர் வைத்துள்ள பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் ஒரு நிமிடம் நின்று அந்த பேனரில் எழுதப்பட்டுள்ள வாசகங்களை படித்த பின்னரே அங்கிருந்து செல்கிறார்கள். ஒவ்வொரு சான்றையும் பெற எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது என்று வைக்கப்பட்டுள்ள இந்த பேனரால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
Share your comments