ஆதார் அட்டை (AADHAR CARD) என்பது, மத்திய மாநில அரசுகளின் அனைத்து சேவைகளுக்கும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்கு முதல் அரசு மானியம் வழங்குவது வரை அனைத்திற்கும் ஆதார் அட்டை அவசியமாகிறது. ஆனால் பலரும் தபால் மூலம் வரும் ஆதார் மட்டுமே அனைத்து இடங்களில் செல்லுபடியாகும் என்று நினைக்கின்றனர். ஆன்லைன் மூலம் நீங்கள் டவுன்லோட் செய்துக்கொள்ளும் ஆதார் அட்டையும் அனைத்து இடங்களிலும் பயன்படுத்திக்கொள்ள முடியும்
சில எளிய முறைகளை பின்பற்றி உங்கள் ஆதார் அட்டையை ஆன்லைன் மூலம் நீங்கள் டவுன்லோட் செய்துகொள்ள முடியும். அதற்கான விழிமுறைகள் இங்கு படிப்படியாக வழங்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?
முதலில் https://eaadhaar.uidai.gov.in/ என்ற ஆதார் வலைதள போர்ட்டலுக்குச் செல்லவும்.
ஆதார் அட்டையை பதிவிறகம் செய்வதற்கான விருப்பங்கள் பின்வருமாறு வழங்கப்பட்டிருக்கும்
-
Using Aadhaar number - ஆதார் எண்
-
Enrollment ID - பதிவு ஐடி
-
Virtual ID - விர்ச்சுவல் ஐடி
இதில் உங்களிடம் எது உள்ளதோ அதை உள்ளீடு செய்ய வேண்டும்
தேவையான விவரங்களை பூர்த்தி செய்த பிறகு, "Send OTP"-யை கிளிக் செய்யவும். இதற்கு பிறகு, UIDAI தரப்பிலிருந்து, ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அணுப்பப்படும் அதனை உள்ளீடு செய்யவேண்டும்.
எல்லா படிநிநலைகளும் முடிந்த பிறகு, டிஜிட்டல் ஆதார் அட்டை பிடிஎப் வடிவத்தில் (PDF Format) பதிவிறக்கம் செய்யப்படும். நீங்கள் டவுன்லோடு செய்ய ஆதார் அட்டை பாஸ்வேர்டு மூலம் பாதுகாக்கப்பட்டிருக்கும். அதை நீங்கள் பார்க்க வேண்டுமென்றால், பயனர் தங்களுக்கு வழங்கப்பட்ட பாஸ்வேர்டை பதிவு செய்ய வேண்டும்.
Password எப்படி அறிவது?
இந்த பாஸ்வேர்டு சொல்லானது ஆதார் அட்டையில் நீங்கள் வழங்கியுள்ள பெயரின் முதல் நான்கு எழுத்துக்களும், உங்களின் பிறந்த ஆண்டும் கொண்டிருக்கும்.
உதாரணமாக : உங்கள் பெயர் DINESHA மற்றும் உங்களின் பிறந்த வருடம் 1987 என்று வைத்துக்கொண்டால் அப்போது, உங்களின் பாஸ்வேர்டு "DINE1987" என்பதாகும். நீங்கள் டவுன்லோட் செய்துள்ள PDF படிவத்தை Open செய்யும் ஒவ்வொரு முறையும் நீங்கள் இந்த பாஸ்வேர்டை பயன்படுத்த வேண்டும்.
மேலும் படிக்க ...
குறைந்த விலையில் டிராக்டர் வாங்க வேண்டுமா? எளிய முறையில் கடன் வழங்குகிறது ICICI வங்கி!
விவசாயிகளே டிராக்டர் வாங்க விருப்பமா? எளிய முறையில் கடன் அளிக்கிறது SBI வங்கி!
பெண்களே தொழில் தொடங்க விருப்பமா?
Share your comments