தேசிய தேர்வு முகமை (NTA) இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இன்று அதாவது ஆகஸ்ட் 30 செவ்வாய்க்கிழமை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கான (NEET UG 2022) விடைக்குறிப்பு வெளியிடப்படுகிறது. நீட் யுஜி 2022 விடைக்குறிப்பு விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in இல் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். முன்னதாக தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு பட்டதாரி (NEET UG 2022) தேர்வு ஜூலை 17 அன்று நடத்தப்பட்டது, இதில் மொத்தம் 18,72,343 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
Step 1: முதலில் neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.
Step 2: இப்போது முகப்புப் பக்கத்தில் உள்ள விடைக்குறிப்பு இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.
Step 3: இப்போது உங்கள் ரோல் எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீட்டு உள்நுழையவும்.
Step 4: விடைக்குறிப்பு திரையில் தோன்றும், அதைப் பதிவிறக்கவும்.
Step 5: விண்ணப்பதாரர்கள் தங்கள் பதில் தாளைப் பதிவிறக்கவும் முடியும்.
NEET UG 2022 நேரடி அறிவிப்புகள்: ANSWER KEY-யை எங்கு பதிவிறக்குவது?
தேசிய தேர்வு முகமை (NTA) அதிகாரப்பூர்வ இணையதளங்கள்: இந்த இணையதளங்களில் இருந்து ANSWER KEYயை பதிவிறக்கம் செய்யலாம்
1- nta.ac.in
2- neet.nta.ac.in
NEET UG விடைக்குறிப்பு 2022: ரெஸ்பான்ஸ் ஷீட்டும் வெளியிடப்படும். நீட் 2022 தாளின் அனைத்து தொகுப்புகளுக்கான விடைக்குறிப்புகள் வெளியிடப்படும். விடைக்குறிப்புடன், விண்ணப்பதாரர்களின் OMR ரெஸ்பான்ஸ் ஷீட்டும் வழங்கப்படும். விடைத்தாள் மீது ஆட்சேபனைகளை தெரிவிக்க விண்ணப்பதாரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். மாணவர்களின் ஆட்சேபனைகளை பரிசீலித்த பின் இறுதி விடைத்தாள் வெளியிடப்படும். இறுதி விடையின் அடிப்படையில் தேர்வு முடிவுகள் அமையும் என்பது குறிப்பிடதக்கது.
NEET UG விடைக்குறிப்பு 2022: ஆட்சேபனை தெரிவிக்க எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்?
தேசிய தேர்வு முகமை (NTA) அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ப்ரோவிஜனல் ஆன்சேர் கீ (Profissional Answer Key), OMR விடைத்தாளின் படத்தை ஸ்கேன் செய்தல் போன்றவை பதிவேற்றப்படும். ப்ரோவிஜனல் ஆன்சேர் கீக்கான ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய, மாணவர்கள் ஒரு விடைக்கு ரூ.200 செலுத்துதல் வேண்டும்.
மேலும் படிக்க:
முருகப்பா குழுமம் 'Montra' 3 சக்கர மின் வாகனத்தை முதல்வர் முன்னிலையில் அறிமுகம்!
TANHODA: வாழை கிளஸ்டர் அமைக்க திட்டம்: Agency-களுக்கு அழைப்பு!
Share your comments