1. செய்திகள்

5 பைசா கூட செலவில்லாமல் E-பாஸ் பதிவு செய்வது எப்படி? - இதோ முழு விவரம்!

Sarita Shekar
Sarita Shekar

TN e-pass

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஊரடங்கு அமலில் உள்ளது.மேலும், மேலும், கொரோனா பரவலின் காரணமாக பிற மாநிலங்கள், நாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே போல தமிழகத்தில் இருந்து வெளியே செல்லவும், ஒரு மாவட்டத்தில் இருந்து, இன்னொரு மாவட்டத்திற்கு செல்லவும் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கட்டுப்பாடுகளை மீறி வெளியே சுற்றித் திரிபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் என பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.  எனினும் மக்கள் பலரும் லாக்டவுனையும் பொருட்படுத்தாமல் நடமாடிக் கொண்டுதான் உள்ளனர். அதனை கட்டுப்படுத்த தற்போது இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனால் தற்போது மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அவசர காரணங்களுக்காக மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். எனினும் இதற்கும் இ-பதிவு கட்டாயம். ஆனால், இன்றும் பலருக்கும் இந்த இ-பாஸ் எப்படி விண்ணப்பிப்பது? என்னென்ன காரணங்களுக்காக விண்ணப்பிக்கலாம். இதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை? என தெரிவதில்லை. அவற்றை பற்றி உங்களுக்கு நான் தெளிவாக விளக்குகிறேன்.

இ-பாஸ் விண்ணப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

இ-பாஸ் விண்ணப்பிப்பதற்காக அரசின் அதிகாரபூர்வமான இணையதளமான https://eregister.tnega.org/#/user/pass -யை முதலில் பார்வையிட வேண்டும். அதில் வெளி நாட்டில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்கள், மற்றவர்கள் என்ற இரு ஆப்சன்கள் இணையத்தில் நுழைந்ததும் இருக்கும். இதில் நீங்கள் ஒரு மாவட்டம் விட்டு, இன்னொரு மாவட்டம் செல்ல வேண்டுமெனில் "மற்றவர்கள்" என்ற இரண்டாவது ஆப்சனை கிளிக் செய்யவும். இதே வெளி நாட்டில் இருந்து வருகிறீர்கள் எனில் முதல் ஆப்சனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மொபைலில் இ-பாஸ் பதிவு செய்வதற்கான வழிமுறைகள் இதோ:-

> முதலில், https.//eregister.tnega.org/#/user/pass என்ற வலைதளத்திற்குள் செல்ல வேண்டும்.

> இதில், உங்களது மொபைல் எண் மற்றும் கேப்ட்சா ஆகியவற்றை பதிவு செய்து உள்நுழையவும்.

> பின், உங்கள் மொபைலுக்கு ஒரு ஓடிபி வரும். அதனை கேட்கப்படும் இடத்தில் பதிவிடவும்.

> பின், நீங்கள் பயணம் செல்ல இருக்கும் இடத்தினை கிளிக் செய்யவும்.

> அடுத்ததாக, உங்களது பெயர், முகவரி ஆகியவற்றை பதிவு செய்யவும். பின், நீங்கள் செல்லும் வீட்டின் முகவரி ஆகியவற்றியும் பதிவு செய்யவும்.

> பயணத்தின் நேரம், பயணத்திற்கான காரணம் ஆகியவற்றையும் பதிவு செய்யவும்.

> காரணத்திற்கான ஆவணத்தை சமர்ப்பிக்கவும். (திருமணம் என்றால், திருமண அழைப்பிதழ், மருத்துவ அவசரம் என்றால், அது குறித்த ஆவணம்)

> பின், பயனர்களின் விவரம், வாகன எண், அடையாள அட்டை (ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை அல்லது ஏதுனும் ஒன்று) ஆகியவற்றையும் சமர்ப்பிக்கவும்.

> விவரங்களை நிரப்பியதும், அதனை சப்மிட் செய்யவும். பின், உங்கள் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, உறுதி செய்யப்பட்டதும் உங்களுக்கு இ பாஸ் வழங்கப்படும்.

மேலும் படிக்க..

தமிழகம் வர இனி E-Pass கட்டாயம்- அதிரடி உத்தரவு!

 

English Summary: How to register an e-pass without spending even 5 paisa? - Here is the full details!

Like this article?

Hey! I am Sarita Shekar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.