இரண்டாவது அலையில் தென்படும் உருமாற்றம் அடைந்துள்ள கொரோனா வைரஸ் (Corona Virus) முந்தையதை விட, இரண்டரை மடங்கு ஆபத்தானதாக உள்ளது. இதுவே, பரவல் அதிக வேகமாக நடப்பதற்கு காரணம் என, ஆராய்ச்சியில் (Research) தெரியவந்துள்ளது.
ஆபத்தான கொரோனா
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த, டாடா அடிப்படை ஆராய்ச்சி மையம் மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த, இந்திய அறிவியல் மையம் ஆகியவை இணைந்து, கொரோனா வைரஸ் பரவல் குறித்து ஆய்வு மேற்கொண்டன.
கணித அடிப்படையில் நடந்த இந்த ஆய்வு குறித்து, அவை கூறியுள்ளதாவது:
தற்போது பரவி வரும் வைரஸ், முந்தையதைவிட, இரண்டரை மடங்கு ஆபத்தானது. ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால், அவர் வாயிலாக, மேலும் மூன்று பேருக்கு பரவும் ஆபத்து உள்ளது. அதனால் தான், இரண்டாவது அலையில், தொற்று பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தடுப்பூசி (Vaccine) வழங்குவது தொடர்ந்தால், ஜூனில் இருந்து பலி எண்ணிக்கை வெகுவாக குறையும். மே மாதத்தில் பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஆனால் படிப்படியாக குறைந்து, ஜூலையில் பள்ளிகளை திறக்கும் சூழ்நிலை ஏற்படும்.
உள்ளூர் ரயில்
பிப்ரவரி முதல் வாரத்தில், இரண்டாவது அலை துவங்கியது. ஆனால், உள்ளூர் ரயில்கள் முழுமையாக இயக்க உத்தரவிட்டதே, பாதிப்பு அதிகரிக்க காரணமாகி விட்டது.
பாதிப்பு தீவிரம்
கர்நாடகாவிலும் வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ளது. பெங்களூரு நகரில், கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டன. அதன்படி பார்க்கையில், 45 சதவீதம் பேர், கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. தொற்று பாதிக்கப்பட்டோருடன், பெங்களூரில் மட்டும், 48.5 லட்சம் பேர், தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ளதாக, மாநகராட்சி கூறியுள்ளது.
மேலும் படிக்க
சில மாதங்களுக்கு இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கும்! சீரம் அதிகாரி அதிர்ச்சி தகவல்!
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, முழு ஊரடங்கை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் பரிந்துரை!
Share your comments