1. செய்திகள்

இலவசங்கள் தொடர்ந்தால் நம் நாடும் இலங்கையாக மாறும்: நல்லசாமி எச்சரிக்கை!

R. Balakrishnan
R. Balakrishnan
Avoid freebies

தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க மற்றும் தக்கவைக்க இலவசங்களை வாரி வழங்குகின்றனர். இந்நிலை தொடர்ந்தால் இலங்கையை போல நம்நாட்டிலும் பொருளாதர நெருக்கடி ஏற்படும் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி எச்சரித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் வந்த தமிழ்நாடு கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறியதாவது: இலவசங்கள் தொடர்ந்தால் இலங்கையை போல நம்நாட்டிலும் பொருளாதார பிரச்சனை ஏற்படும். மின்சார பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் பேட்டரியில் இயங்கும் டிராக்டரை அறிமுகப்படுத்த வேண்டும். உடனடியாக இயற்கை விவசாயத்திற்கு மாறக்கூடாது. அதனால் உணவுப்பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது. படிப்படியாக மாற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலவசங்களை தவிர்க்கவும் (Avoid freebies)

தற்போதைய கல்வித்திட்டம் கறிக்கோழியை வளர்ப்பதுபோல உள்ளது. தரமான கல்வியை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலத்தில் ஆகஸ்ட் மாதம் 5 முதல் 7 வரை வாழ்வுரிமை மாநாடு, வேளாண் கண்காட்சி, கருத்தரங்கு நடக்கிறது. இதில், மத்திய, மாநில அமைச்சர்கள், தமிழக எதிர்க்கட்சி தலைவர் பங்கேற்க உள்ளனர். இதில் தேவையற்ற இலவசங்களை தவிர்க்கவும், விவசாயிகள் வருவாய் இரட்டிப்பு செய்வது உள்ளிட்ட பல கோரிக்கைகள் முன்நிறுத்த உள்ளோம்.

கள் இறக்குதல் 

பிற மாநிலங்களில் கள் இறக்க, விற்க தடையில்லை. கள் இறக்குவது, பருகுவது மக்களின் உரிமை. இதற்காக தொடர்ந்து போராடுகிறோம். கள் இறக்க தமிழக அரசு அனுமதி அளிக்கும் என்று நம்புகிறோம். இல்லையெனில் ஆகஸ்ட் 16 இல் அசுவமேத யாகம் நடத்தப்படும். அப்போது குதிரையை தடுத்து நிறுத்தி கள் போதைப்பொருள் என நிரூபித்தால் அவர்களுக்கு ரூ.10 கோடி வழங்கப்படும்.

முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி நீரை தேக்க வேண்டும், பேபி அணை கட்ட வேண்டும் என நல்லசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்க

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்வு: மகிழ்ச்சியில் விவசாயிகள்!

தேங்காய் பருப்பு விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி!

English Summary: If the freebies continue, our country will become Sri Lanka: Nallasamy Warning! Published on: 13 July 2022, 06:43 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.