வரதட்சணையால் நிகழும் கொலை, கொள்ளை உள்ளிட்டக் குற்றச்செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், கேரள அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
குற்றச் செயல்கள் (Crimes)
வரதட்சணையை ஒழிக்க எத்தனை மகான்கள் தோன்றினாலும், புதுப்புது ரூபத்தில் வரதட்சணைக் கொடுமை இந்த சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறது. இதன் காரணமாகக் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் செயல்களும் நாளுக்கு அதிகரித்து வருகிறது.
குறிப்பாகக் கேரளா மாநிலத்தில் கடந்த சில மாதங்களில் வரதட்சணை கொடுமையால் நடந்த கொலை, கொள்ளை மற்றும் தற்கொலை சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
கையெழுத்து (Signature)
இந்நிலையில் வரதட்சணை முறையை ஒழிக்க, கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் (Arif Mohammed Khan), புதுமையான முயற்சியை பரிந்துரைத்தார்.
மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் (Vice-chancellors), மாணவர்களை கல்லூரியில் சேர்க்கும் போதும், அவர்களுக்கு பட்டம் அளிக்கும் போதும், வரதட்சணை வாங்க மாட்டேன் மற்றும் வரதட்சணை கொடுக்க மாட்டேன் என உறுதி மொழி பத்திரத்தில் மாணவர்களிடமும், அவர்களது பெற்றோர்களிடமும் கையெழுத்து வாங்க வேண்டும் என என்பதுதான் அந்த உத்தரவு.
பட்டம் ரத்து (Degree Cancelled)
இதனை பல பல்கலைகழகங்கள் பின்பற்றி வருகின்றன. அந்த வகையில், கேரள மாநிலத்தின் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் (Calicut University), வரதட்சணை வாங்க மாட்டேன், வரதட்சணை கொடுக்கவும் மாட்டேன் என உறுதி மொழி பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய பிறகு மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடம் வழங்கி வருகிறது.
உறுதி மொழியை மீறி வரதட்சணை வாங்கினால் பல்கலைக்கழகத்தில் வாங்கிய பட்டம் ரத்து செய்யப்படும் என கோழிக்கோடு பல்கலைகழகம் அறிவித்துள்ளது.
உறுதி
இதேப்போன்று கடந்த மாதம் கொச்சியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கேரள மீன்வள மற்றும் கடல்சார் பல்கலைக்கழகத்தின் இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகள் உட்பட, 386 மாணவர்கள், வரதட்சணை வாங்க மாட்டேன், வரதட்சணை கொடுக்க மாட்டேன் என கையொப்பமிட்ட உறுதி மொழி பத்திரங்களை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
TNAUவில் வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்க்கை- வரும் 8ம் தேதி தொடக்கம்!
Share your comments