வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் தற்போது ATM பயன்படுத்துவது சர்வசாதரணமாகிவிட்டது, நகரத்தின் எந்த மூலையிலும் பணம் தேவைப்படும்போது ATM-ல் எடுத்துக்கொள்ளலாம். UPI சேவை போன்ற பல சேவைகள் இருந்தாலும் ATM கைகொடுப்பதுபோல் எதுவும் கைகொடுக்காது. தீடீர், கட்டணம் உயர்வு ஏன்?
ATM-ல் பணம் எடுப்பதன் மூலம் வங்கிக்கு சென்று நீண்ட நேரம் காத்திருந்து பணம் எடுக்க வேண்டிய தேவையில்லை, நேரமும் மிச்சமாகும். இதனாலேயே பலரும் ATM சென்று பணம் பெறுகின்றனர், மேலும் ATM-களில் எளிதாக பணம் எடுக்கவும் முடியும், பணம் போடவும் முடியும். ஸ்டேட் வங்கியின் ATM மையத்தில் நான்கு தடவைக்கு மேல் பணம் எடுத்தால் அவர்களுக்கு ரூ.173 கட்டணம் வசூலிக்கப்படும் என்று சமூக வலைத்தளங்களில் சில தகவல்கள் பரவி வந்தது, தற்போது இந்த தகவல் போலியானது என்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய அந்த செய்தியில், ஒருவரது சேவிங்ஸ் அக்கவுண்டில், ஒரு வருடத்தில் நாற்பது தடவைக்கு மேல் டிரான்ஸாக்ஷன் (Transaction) செய்யப்பட்டால் அவர்களது டெபாசிட் தொகையிலிருந்து ரூ.57.5 கழிக்கப்படும் என்றும், SBI வங்கியின் ATM-லிருந்தது ஒரு மாதத்தில் நான்கு தடவைக்கு பணம் எடுக்கும் நபர்களின் கணக்கிலுள்ள பணத்தில் ரூ.173 கழிக்கப்படும் என்றும், அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது போலியான செய்தி என்பது SBI வங்கி செக் மூலம் கண்டறியப்பட்டு இருக்கிறது, மேலும் ட்ரான்ஸாக்ஷன் மற்றும் ATM விதிகள் குறித்து, இதுவரை ஸ்டேட் வங்கி எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
தற்போது இவை அனைத்துமே போலியான செய்தி என்றும், இதுபோன்ற தகவல்களை மக்கள் நம்பவேண்டாம் என்றும் பிஐபி உண்மையை கண்டறிந்து கூறியுள்ளது. ரிசர்வ் வங்கி கூறியுள்ளபடி, ஒரு மாதத்தில் ஒருவர் ATM-ல் 5 தடவை இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம், அதற்கு மேல் எடுக்கும்பட்சத்தில் ரூ.21 மட்டுமே வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளது.
மேலும் படிக்க:
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் என்ன?
50% மானிய விலையில் சம்பா பருவத்திற்கு ஏற்ற நெல் இரகங்கள் விநியோகம்
Share your comments