மத்திய அரசின் இலவச ரேஷன் திட்டத்தின் கீழ் ரேஷன் உணவு பெறுபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது. ரேஷன் பெறுவதற்கான நேரம் மாற்றப்பட்டுள்ளது. தற்போது, ரேஷன் கார்டுதாரர்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கடைக்கு சென்று ரேஷன் வாங்கலாம் என்ற விதிமுறை உள்ளது. ஆனால், இனி அப்படிச் செய்ய முடியாது. ரேஷன் விநியோக முறை மற்றும் நேரத்தை அரசு மாற்றியுள்ளது.
ரேஷன் கடை (Ration Shop)
PHH மற்றும் அந்த்யோதயா அட்டை வைத்திருப்பவர்களுக்கு அரசால் இலவசமாகவும் மானிய விலையிலும் ரேஷன் வழங்கப்படுகிறது. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அரசிடமிருந்து இந்த உதவிகள் கிடைக்கும். ஏப்ரல் மாதத்திற்கான ரேஷன் விநியோகமும் தற்போது தொடங்கியுள்ளது. ரேஷன் விநியோகத்துக்கான புதிய விதியின்படி ஏப்ரல் 13 முதல் 24 வரை ரேஷன் விநியோகம் செய்யப்படும்.
முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை
'முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில் இலவச ரேஷன் விநியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அந்த்யோதயா அட்டைதாரர்களுக்கு 14 கிலோ கோதுமை, 20 கிலோ அரிசி, 1 கிலோ பஜ்ரா (கம்பு) வழங்கப்படும். PHH மக்களுக்கு 2 கிலோ கோதுமை, 2 கிலோ அரிசி மற்றும் 1 கிலோ கம்பு கிடைக்கும். கம்பு முடிந்ததும் அரிசியின் அளவு அதிகரிக்கப்படும்.
ரேஷன் விநியோக நேரமும் அரசால் மாற்றப்பட்டுள்ளது.
இப்போது ரேஷன் கடை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்க வேண்டும். இதன் மூலம் அனைவரும் வசதியாக ரேஷன் வாங்க முடியும். இது தவிர, முதலில் வருபவர்களுக்கு அரசிடம் இருந்து தினை கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. இனி ஒவ்வொரு மாதமும் 13ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை ரேஷன் விநியோகம் செய்யப்படும். உத்தரப் பிரதேச மாநிலத்தில்தான் இந்த புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
கோடையில் மின்தடை ஏற்படாது: அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு!
ஆதார் கார்டை புதுபிக்கவில்லை என்றால் சிக்கல் தான்: உடனே இதைச் செய்யுங்கள்!
Share your comments