ரேஷன் கடைகளுக்கு, பொங்கல் பரிசில் இடம் பெற்றுள்ள பச்சரிசி, சர்க்கரை, 60 சதவீதம் சப்ளை செய்யப்பட்டு உள்ளது; மீதமுள்ளவை இரு தினங்களில் சப்ளை செய்யப்படும்,'' என, உணவு துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
பொங்கல் பரிசு (Pongal Gift)
சென்னை, கோபாலபுரத்தில் உள்ள, தமிழக நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ள பச்சரிசி, சர்க்கரை தரம், சப்ளை தொடர்பாக, அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவு மற்றும் உணவு துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், உணவு வழங்கல் துறை ஆணையர் ராஜாராமன், வாணிப கழக மேலாண் இயக்குனர் பிரபாகர் ஆகியோர், நேற்று ஆய்வு செய்தனர்.
பின், சக்கரபாணி அளித்த பேட்டி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2.19 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு தலா, 1,000 ரூபாய் ரொக்கம், 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுஉள்ளார். அவற்றின் விநியோகத்தை, முதல்வர், வரும் 9ம் தேதி துவக்கி வைக்கிறார். இதற்காக, கார்டுதாரர்களின் வீடுகளில் இன்று முதல், டோக்கன் வழங்கும் பணி துவங்கி உள்ளது.
ஜனவரி 9 முதல் 12 வரை பரிசு தொகுப்பு வழங்கும் பணியை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. வாங்காதவர்கள், 13ம் தேதி வாங்கலாம். ரேஷன் கடைகளுக்கு பொங்கல் பரிசில் இடம் பெற்றுள்ள பச்சரிசி, சர்க்கரை உட்பட, மாதந்தோறும் வழக்கமாக வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும், 60 சதவீதம் சப்ளை செய்யப்பட்டு விட்டது. மீதமுள்ள பொருட்களும், இன்னும் இரு தினங்களில் அனுப்பப்படும்.
கரும்பு (Sugarcane)
விவசாயிகள் கோரிக்கையை ஏற்று, பொங்கல் பரிசில் கரும்பும் வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். கரும்பு கொள்முதலில் தவறு நடக்காமல் இருக்க, கலெக்டர்கள் தலைமையிலான குழு, விவசாயிகளை சந்தித்து கரும்பு கொள்முதல் செய்கிறது. ரேஷன் கார்டுதாரர்களின் விரல் ரேகை பதிவு செய்து, பரிசு தொகுப்பு வழங்கப்படும்.
மேலும் படிக்க
சாக்லெட் பிசினஸ் தொடங்க ரூ.10,000 போதும்: பல லட்சம் லாபம்!
பொங்கல் பரிசில் ஏதேனும் பிரச்சனையா? புகார் தர இலவச எண்கள் வெளியீடு!
Share your comments