நீலகிரி மாவட்டத்தில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொதுஇடங்களில் முகக்கவசம் (Mask) அணியாமல் வருவர்களுக்கு 6 மாத சிறை தண்டனையுடன் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா அறிவித்துள்ளார்.
நிபுணர்கள் எச்சரிக்கை(Experts warn)
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை என்றால் மீண்டும் 2-வது அலை உருவாகும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இ-பாஸ் (E- Pass)கட்டாயம்
இதையடுத்து, மாநிலம் முழுவதும், கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக, அண்டை மாநிலங்களைத் தவிர பிற மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் (E- Pass) கட்டாயம் என்று அரசு அறிவித்தது. குறிப்பாக கேரளாவிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சியர் அறிவிப்பு (Collector Announced)
இந்நிலையில் உதகையில் கொரோனா விதிமுறைகள் மீறப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன. இதன் அடிப்படையில், பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாத சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் இன்னசனட் திவ்யா அறிவித்துள்ளார்.
2-வது அலை (2nd Wave)
மலைகளில் ராணி என அழைக்கப்படும் ஊட்டியில் அதிக சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். எனவே இரண்டாவது அலை வந்தால் கட்டுபடுத்த முடியாது என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரூ.30 லட்சம் அபராதம் (A fine of Rs 30 lakh)
கொரோனா விதிமுறைகளை கண்காணிக்க 20 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைக்கபட்டுள்ளது. இதுவரை 30,68,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஊரடங்கு (Curfew again)
இதனிடையே நாக்பூர் மாவட்டத்தில் வரும் மார்ச் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது. நாக்பூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும். இந்த ஊரடங்கின் போது அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
மானியம் பெற்று தருவதாக விவசாயிகளிடம் மோசடி!
தமிழகம் வர இனி E-Pass கட்டாயம்- அதிரடி உத்தரவு!
சென்னையில் பிடிபடும் 80 சதவீத மீன்களில் பிளாஸ்டிக் துகள்கள்! அதிர்ச்சி தகவல்!
Share your comments