1. செய்திகள்

சென்னையில், நகரும் ரேஷன் கடை! காய்கறிகள் விற்கப்படுமா? மக்கள் எதிர்ப்பார்ப்பு

KJ Staff
KJ Staff
Credit : Nakkheeran

சென்னையில் புதிதாக தொடங்கப்பட்ட நகரும் ரேஷன் கடைகளில் (Moving Ration Shop), முக்கிய காய்கறிகள், குறைந்த விலைக்கு விற்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு, மக்களிடம் எழுந்துள்ளது.

பசுமை காய்கறி கடைகள்:

கூட்டுறவுத் துறை (Cooperative Department) சார்பில், 79 பண்ணை பசுமை காய்கறி கடைகள் நடத்தப்படுகின்றன. அங்கு, வெளிச்சந்தையை விட, சற்று குறைந்த விலைக்கு காய்கறிகள் (Vegetables) விற்கப்படுகின்றன. கடைகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், அதிகம் பேர் பயன்பெற முடியவில்லை. மலை, வனப் பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் கார்டுதாரர்கள், போதிய சாலை வசதி இல்லாததால், ரேஷன் கடைகளுக்கு சென்று, அத்தியாவசிய பொருட்களை (Essential items) வாங்க சிரமப்படுகின்றனர்.

நகரும் ரேஷன் கடை:

நகரும் ரேஷன் கடையை வேன், லாரியில் பொருட்கள் எடுத்து சென்று, கார்டுதாரர்களின் வீடுகளுக்கு அருகில் வழங்கப்படுகின்றன. இதற்கு, பலரிடமும் வரவேற்பு காணப்படுகிறது. தற்போது, வெங்காயம் (Onion) விலை உயர்ந்துள்ளதால், பண்ணை பசுமை காய்கறி கடைகளில் (Farm Green Vegetable Shop), கிலோ வெங்காயம், 45 ரூபாய் என்ற, குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது. இதேபோல, மற்ற காய்கறிகளும் கிடைப்பதில்லை. காய்கறிகள் வரத்து திடீரென பாதித்து, விலையும் உயர்கிறது.

இதனால், ஏழை மக்களுக்கு, கூடுதல் செலவாகிறது. எனவே, நகரும் ரேஷன் கடைகளில், வெங்காயம், தக்காளி, உருளை உள்ளிட்ட முக்கிய காய்கறிகளை, குறைந்த விலைக்கு, தரமானதாக விற்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், அதிகம் பேர் பயனடைவர் என்று கார்டுதாரர்கள் கூறினர். இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பெருவெள்ளம், புயல், முழு ஊரடங்கு (Lockdown) சமயங்களில், வேனில், கார்டுதாரரின் இருப்பிடங்களுக்கு அருகில் காய்கறிகள் விற்கப்பட்டன. நகரும் ரேஷன் கடைகளில், காய்கறிகள் விற்பது தொடர்பாக, தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து, முடிவு எடுக்கப்படும் என்றார்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

மக்களின் அலைச்சலைத் தவிர்க்க, நடமாடும் இ-சேவை மையம்!

கடலூரில் உணவு பூங்கா அமைக்க ஏற்பாடு! முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்க அழைப்பு!

English Summary: In Chennai, a moving ration shop! Are vegetables sold? People expect Published on: 09 November 2020, 06:55 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.