Coconut Sales
ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் கொடுமுடி சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 9,685 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்தனர்.
தேங்காய் விற்பனை (Coconut Sales)
இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 18 ரூபாய் 69 காசுக்கும், அதிகபட்ச விலையாக 23 ரூபாய் 65 காசுக்கும், சராசரி விலையாக 23 ரூபாய் 19 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 3,861 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 85 ஆயிரத்து 835 ரூபாய்க்கு விற்பனையானது.
இதேபோல, தேங்காய் பருப்பு 754 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 73 ரூபாய் 99 காசுக்கும், அதிகபட்ச விலையாக 78 ரூபாய் 16 காசுக்கும், சராசரி விலையாக 76 ரூபாய் 76 காசுக்கும் விலை போனது.
மேலும், இரண்டாம் தரம் குறைந்தபட்ச விலையாக 56 ரூபாய் 79 காசுக்கும், அதிகபட்ச விலையாக 74 ரூபாய் 49 காசுக்கும், சராசரி விலையாக 70 ரூபாய் 55 காசுக்கு ஏலம் போனது. மொத்தமாக 36,241 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு 25 லட்சத்து 63 ஆயிரத்து 461 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.
Share your comments