வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எல்பிஜி சிலிண்டரை, வாட்ஸ்-அப் எண்ணிலேயே முன்பதிவு செய்யும் வசதியை இன்டியன் ஆயில் இன்டேன் கேஸ்(Indian oil Indane Company) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
சமையல் சிலிண்டர் காலியாகும்முன்பே, அதற்கென பதிவுசெய்யப்பட்ட எண்ணில் முன்பதிவு செய்து ஆன்லைனிலேயே பணத்தை செலுத்தி சிலிண்டர் பெறுவது தற்போது நடைமுறையில் உள்ளது.
இருப்பினும், இந்த சேவைகளை மேலும் எளிமையாக்கும் விதமாக, வாட்ஸ்-அப் மூலம் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எந்த மொபைல் நம்பர்? (Which Mobile Number)
இதன்படி, இன்டேன் சிலிண்டர் கனெக்ஷன் வைத்துள்ள வாடிக்கையாளர்கள் சிலிண்டரை முன்பதிவு செய்துகொள்ளலாம்.
செய்ய வேண்டியவை (What to do)
இதற்கு, உங்கள் மொபைல் நம்பரை இந்த எண்ணில் பதிவு செய்யது அவசியம்.
எந்த எண்ணை பதிவு செய்கிறீர்களோ அந்த எண்ணில் மட்டுமே இனிமேல் சிலிண்டர் புக்கிங் (Booking) செய்ய முடியும்.
ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள மொபைல் எண்ணை பதிவு செய்திருப்பதன் மூலமே நாம் சிலிண்டரை புக்கிங் செய்து வருகிறோம்.
நீங்கள் பயன்படுத்தும் மொபைல் எண், இன்னும் பதிவு செய்யப்படாமல் இருப்பது தெரியவந்தால், உங்கள் கேஸ் ஏஜென்சிக்கு நேரில் சென்று முன்பதிவு செய்துகொள்ளுங்கள்.
எப்படி முன்பதிவு செய்வது? (How to register)
முதலில் இந்த 7588888824 என்ற நம்பரை உங்கள் மொபைலின் Contact-ல் Save செய்து கொள்ளுங்கள்.
அதன்பிறகு, இந்த வாட்ஸ்-அப்பில் உள்ள சாட் பாக்ஸை (chat box) ஓபன் செய்து, அதில் உள்ள Messageல் REFILL என்று Type செய்துவிடவும். பிறகு hash பட்டனை அழுத்திவிட்டு, உங்களது 16 டிஜிட் வாடிக்கையாளர் ID எண்ணை Type செய்யவும். இந்த எண் உங்களது சிலிண்டர் பதிவை உறுதி செய்யும்.
மேலும் படிக்க..
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி-மினிமம் பேலன்ஸிற்கு விதிக்கப்படும் அபராதம் ரத்து!
SSY:மாதம் 3000 முதலீட்டில் 17 லட்சம் ஈட்டும் மத்திய அரசின் திட்டம்! தெரியுமா உங்களுக்கு!
Share your comments