1. செய்திகள்

தமிழ்நாட்டில் "ஊட்டி ஏலக்காய் டீ"-யை அறிமுகம் செய்யும் இண்ட்கோசர்வ்!

Daisy Rose Mary
Daisy Rose Mary

நீலகிரியில் உள்ள 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் ஆலோசனைக் குழுவான இண்ட்கோசர்வ், தமிழ்நாட்டில் தேயிலை பிரியர்களுக்கு புதிய சுவை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இண்ட்கோசர்வ் இப்போது ஏலக்காய் சுவை கொண்ட தேயிலையை நியாயமான விலையில் தங்கள் சில்லறை விற்பனை நிலையங்களில் வாங்க முடியும்.

இந்த ஏலக்காய் தேயிலை எங்களின் முதன்மை பிராண்டான "ஊட்டி" தேயிலையுடன் விரைவில் சில்லறை விற்பனை நிலையங்களில் கிடைக்கும். கூடிய விரைவில் மேலும் பல வகை சுவைகளும் இதில் சேர்க்கப்படும் என தமிழக அரசின் முதன்மை செயலாலரும், இண்ட்கோசர்வ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான சுப்ரியா சாஹூ கூறியுள்ளார்.

"வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டுக்கான தேசிய வங்கி (நாபார்ட்)-ன் சேர்மேன் ஜிஆர்.சின்தலா இண்ட்கோசர்வ் உருவாக்கிய "Ooty Tea" App-ஐ அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் தேயிலை பொருட்கள் மற்றும் சரக்கு நிலையை மதிப்பீடு செய்ய உதவும் என்றார்.

மேலும், அனைத்து பொது விநியோக அமைப்பு இடங்களிலும் விற்பனையை அதிகரிக்க, நாங்கள் இந்த மொபைல் ஆப்-ஐ பயன்படுத்துவோம்," என்றும் சின்தாலா கூறினார். சுமார் 30,000 சிறு தேயிலை உற்பத்தியாளர்களின் வசதிக்காக ''INDCO@TEA' என்ற பெயரில் மற்றொரு ஸ்மார்ட்போன் ஆப்பையும் நாங்கள் தொடங்கினோம், தேயிலைகளின் விலை, அவர்களுக்கு செலுத்த வேண்டிய கொடுப்பளவுகள், கள நடைமுறைகள் மற்றும் வானிலை போன்ற சரியான நேர தரவுகளுடன் எந்நேரமும் இந்த ஆப் செயல்படும் என்றும் ஜி.ஆர்.சின்தாலா கூறினார்.

இண்ட்கோசர்வின் முயற்சிகளை அங்கீகரித்த சிந்தாலா, இது இந்த தருணத்தின் தேவை, ஏனெனில் இது உற்பத்தித்திறனை மேம்படுத்த உதவும். விவசாயிகள் தங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ள உதவுவதற்கும், பண்ணையிலிருந்து தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்வதற்கும் நபார்ட் கவனம் செலுத்தும் என்றார்.

இந்த புதிய முயற்சிகளுக்கான இண்ட்கோசர்வின் ஆலோசகரும் குழுத் தலைவருமான சீனிவாசன் ஸ்ரீராம், விவசாயிகளின் நிலைத்தன்மையை அதிகரிக்க இது எவ்வாறு உதவும் என்பதை விவரித்தார், இந்த ஆப்-களின் தொழில்நுட்ப அம்சங்களையும் விளக்கினார்.

இந்த ஆப்-ஐ நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, இண்ட்கோசர்வ் தலைவர் சிவகுமார், பொது மேலாளர் எம்.அக்பர் மற்றும் துணை பொது மேலாளர் சங்கரநாராயண பிள்ளை ஆகியோர் மற்றும் விவசாயிகள் பலர் ஊக்குவித்தனர்.

மேலும் படிக்க...

வேளாண் சீர்திருத்தங்களுக்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு தீர்மானம் நிறைவேற்றம்!

90% மானியத்தில் வெள்ளாடு, செம்மறி ஆடு பெற விண்ணப்பிக்கலாம் - விவரம் உள்ளே!!

தமிழக சட்டப்பேரவையில் நாளை இடைக்கால பட்ஜெட் - ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்!!

காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம்! அடிக்கல் நாட்டி விவசாயிகளின் 100 ஆண்டு கால கனவு நிறைவேற்றினார் முதல்வர்!

English Summary: Indcoserve Soon to launch "Ooty Cardamom Tea" in Tamil Nadu for retail price Published on: 22 February 2021, 12:16 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.