1. செய்திகள்

சுதந்திர தினம்: செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி!

R. Balakrishnan
R. Balakrishnan
Independence Day
75th Independence Day

இந்தியாவின் 75வது ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நாட்டின் 75-வது சுதந்திர தின விழா இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி சுதந்திர தின விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுதந்திர தின விழாவையொட்டி டெல்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கொடியேற்றம்

இதனையடுத்து, செங்கோட்டைக்கு வந்த பிரதமர் மோடி முப்படையினரின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். இதன் பின்னர், மூவர்ண கொடியை (National Flag) அவர் ஏற்றி வைத்தார். பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்ததும், விமானப்படையை சேர்ந்த இரண்டு Mi-17 ரக விமானங்கள் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

சுதந்திர தின உரை

தேசியக்கொடியை ஏற்றிவைத்த பின்பு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

  • நாட்டு மக்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
  • மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட அனைவரின் தியாகத்தையும் நினைவுகூர்வோம்
  • நமது விடுதலை போராட்ட வீரர்களை நினைவுகூர்வதற்கான தினம் இன்று
    ஒலிம்பிக்கில் பங்கேற்ற அனைவருக்கும் பிரதமர் மோடி கைகளை தட்டி பாராட்டு தெரிவித்தார்.
  • ஒலிம்பிக்கில் நம் நாட்டு வீரர்கள் திறமையுடன் விளையாடி பெருமை சேர்த்தனர்.
  • வருங்கால தலைமுறைகளுக்கு உற்சாகம், விழிப்புணர்வை விளையாட்டு வீரர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
  • ஒலிம்பிக் தடகளத்தில் புதிய வரலாற்றை படைத்தது பெரிய விஷயம்
  • ஆகஸ்ட் 14-ல் நாடு பிரிவினை அடைந்த போது பொதுமக்கள் கடும் துயரை அனுபவித்தனர்.
  • கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் உலகத்திலேயே நம் நாடுதான் முதலிடத்தில் உள்ளது.
  • இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசியை உருவாக்கியுள்ளோம் என்பது பெருமைக்குரிய விஷயம்
  • கொரோனா காலத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், தடுப்பூசி கண்டுபிடித்தவர்கள் என அனைவருக்கும் எனது வணக்கங்கள்
  • உலகின் முன்னணி நாடுகளில் கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கத்தொடங்கியதோ அப்போது இந்தியாவிலும் கிடைக்கத்தொடங்கியது.
  • கொரோனா பெருந்தொற்று காலத்தில் 80 கோடி மக்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கினோம்.
  • நகரம், கிராமம் என்று இல்லாமல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வளர்ச்சியை அடைய உள்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும்.
  • நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக நிறைய திட்டங்களை வகுத்திருக்கிறோம்.

முதல் வேளாண் பட்ஜெட்: தரிசு நிலங்களை பரிசு நிலங்களாக மாற்றி சாகுபடி பரப்பு உயர்த்தப்படும்!

  • இந்தியாவில் ஒரு பகுதி கூட பின்தங்கிய பகுதியாக இருக்க கூடாது என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறோம்
  • ஒவ்வொரு ஏழைகளுக்கும் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது.
    கடந்த 2 ஆண்டுகளில் 4.5 கோடி குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
  • கிராமங்களில் தரமான மருத்துவ வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    நாட்டின் வளர்ச்சியை வேகமடைய செய்ய ‘கதி சக்தி’ திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.
  • போர் விமானங்களை தயாரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளோம்.
    நம்முடைய தயாரிப்புகள் தரமானதாக இருக்க வேண்டும். அதில் மட்டுமே நம் நாட்டின் பெருமை உள்ளது.
  • மக்கள் தொகை பெருக்கத்தால் விவசாய நிலப்பரப்பு சுருங்கி வருகிறது.
    விவசாயத்தில் நமது விஞ்ஞானிகள் புதிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்.
  • சிறு விவசாயிகளை கருத்தில் கொண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.
  • இந்தியா ஓரு காலத்தில் 8 பில்லியன் செல்போன்களை இறக்குமதி செய்தது தற்போது 3 பில்லியன் செல்போன்களை நாம் ஏற்றுமதி செய்கிறோம்.
  • வரிகளில் இருந்த பிரச்சினை நீக்கப்பட்டு எளிமையாக்கப்பட்டுள்ளன.
  • கிராமங்களும் நகரங்களும் இணைந்து வளர்ச்சிக்காக பாடுபட்டு கொண்டிருக்கின்றன.

மேலும் படிக்க

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு மத்திய அரசு தடை!

முதல் வேளாண் பட்ஜெட்: கரும்பு கொள்முதல், நெல் குறைந்த பட்ச ஆதார விலை உயர்வு!

English Summary: Independence Day: Prime Minister Modi hoists the national flag at the Red Fort! Published on: 15 August 2021, 09:22 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.