1. செய்திகள்

3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
India Employment Report 2024

கடந்த 3 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 56 மில்லியன் இந்தியர்கள் மீண்டும் விவசாய பணிகளில் இறங்கியுள்ளனர் என சமீபத்தில் வெளியிடப்பட்ட “இந்தியா வேலைவாய்ப்பு அறிக்கை- 2024” -ல் குறிப்பிடப்பட்டுள்ளது. இது உண்மையில் ஒரு நல்ல அறிகுறியா? அல்லது பொருளாதார நெருக்கடியின் காரணமாக ஏற்பட்ட மாற்றமா? என விவாதம் தொடங்கியுள்ளது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO- International Labour Organization) மற்றும் இன்ஸ்டிடியூட் ஃபார் ஹ்யூமன் டெவலப்மெண்ட் (IHD- Institute for Human Development) இணைந்து தயாரித்த ”இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை 2024” சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. கோவிட் 19 காலச்சூழ்நிலையால் வேலைவாய்ப்பில் எதிர்பாராத பல திருப்பங்கள் நிகழ்ந்துள்ளது என்பது இவ்வறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.

விவசாயத்திற்கு திரும்பிய இந்தியர்கள்:

இந்த அறிக்கையானது, 2000 மற்றும் 2022-ல் National Sample Surveys and the Periodic Labour Force Surveys மூலம் இந்திய அரசு பெற்ற தகவல்களையும் உள்ளடக்கி வெளியிடப்பட்டுள்ளது. இதில் கவனிக்கத்தக்க விஷயம் இளைஞர்கள் பலர் வேலைவாய்ப்பற்று உள்ளனர். 2020 முதல் 2022-க்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் கிட்டத்தட்ட 56 மில்லியன் இந்தியர்கள் மீண்டும் விவசாயம் தொடர்பான பணிகளுக்குத் திரும்பியுள்ளனர்.

இதற்கு முக்கிய காரணம் 2020-ஆம் ஆண்டில் நிலைகுலைய வைத்த கோவிட்-19 தொற்று என குறிப்பிடப்பட்டுள்ளது. 1947-ல் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை போது இடம்பெயர்ந்த மக்களின் கூட்டத்தை விட பொது முடக்கத்தால் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகம் எனவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

விவசாயத்தை விட்டு வெளியேறிய இளைஞர்கள்:

2020 ஆம் ஆண்டில், விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை 30.8 மில்லியன் அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்த ஆண்டான 2021-ல் மேலும் 12.1 மில்லியன் இந்தியர்கள் விவசாய பணிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

2022-ல் மேலும் 12.9 மில்லியன் பேர் விவசாயத் தொழில்களில் இறங்கியுள்ளனர். "2000 முதல் 2019 க்கு இடையில், இளைஞர்கள், அதிகளவில் விவசாயத்தை விட்டு வெளியேறினர்.ஆனால் இந்தப்போக்கு அப்படியே தலைகீழாக மாறியுள்ளது தற்போது.

"2000-19 ஆம் ஆண்டில், குறைந்த உற்பத்தித்திறன் கொண்ட விவசாயத்திலிருந்து ஒப்பீட்டளவில் அதிக உற்பத்தி திறன் கொண்ட விவசாயம் அல்லாத பிற துறைகளுக்கு பலர் சென்றனர்" என்று ILO-IHD அறிக்கை கூறுகிறது. அதன் விளைவாக 2000-2019-ல் விவசாயத் துறையில் வேலைவாய்ப்பானது எதிர்மறையா வளர்ச்சியை தான் பதிவு செய்துள்ளது.

மோசமான அறிகுறி- நிபுணர்கள் கவலை:

விவசாயத்திற்கு அதிக அளவில் தொழிலாளர்கள் திரும்பும் இந்த மாற்றம் ஒரு நல்ல செய்தியாக இருக்காது. இது ஒரு துயரத்தின் அறிகுறியாக இருக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

அதற்கு காரணம், விவசாயம் அல்லாத துறைகள் வேலைவாய்ப்பை உருவாக்க முடியாததால், மக்கள் ஊதியம் குறைவாக கிடைக்கும் விவசாயத் துறைக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

Read also: 20 ஆண்டுகளாக KVK மூலம் தொடர் பயிற்சி- முன்னோடி விவசாயியாக திகழும் ஒண்டிமுத்து!

மேலும், 2020-2022 ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் விவசாயத் துறையில் மீண்டும் இணைந்துள்ளனர். “2019-க்குப் பிறகு அதிகரித்து வரும் வேலைவாய்ப்பில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு சுயதொழில் செய்யும் தொழிலாளர்களைக் கொண்டிருந்தது. அவர்களில் ஊதியம் பெறாத (பெண்கள்) குடும்பப் பணியாளர்களே அதிகம்” என்றும் அறிக்கை கூறுகிறது. 2022 ஆம் ஆண்டில், விவசாயத்தில் பணிபுரியும் பெண்களின் விகிதம் 62 சதவீதமாக இருந்தது. அதே காலக்கட்டத்தில் ஆண்களின் விகிதம் 38 சதவீதம் மட்டுமே.

விவசாயத்துறையில் போதிய வருமானம் கிடைக்காத சூழ்நிலை நிலவும் நிலையில், பலர் அத்துறைக்கு திரும்பி உள்ளது மற்ற துறைகளில் நிலவும் வேலைவாய்ப்பின்மையினை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது என இவ்வறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு: India Employment Report 2024

Read more:

KVK 50: ஹெல்த் மிக்ஸ் தயாரிப்பில் அசத்தும் பெண்- வெற்றிக்கு வழிக்காட்டிய அரியலூர் கேவிகே

மாவுப்பூச்சி: விவசாயிகளின் மெயின் வில்லனே இதுதான்- கட்டுப்படுத்த என்ன வழி?

English Summary: India Employment Report 2024 says 56 Million Indians return to agriculture in 3 years Published on: 29 March 2024, 03:26 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.