கடந்த 2021 - 22 பருவத்தில், இந்தியா 315.72 மில்லியன் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்து சாதனை படைக்கும் என எதிர்பார்ப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2021 -22 பருவத்தில் இந்தியாவில் 315.72 மில்லியன் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அதற்கு முந்தைய பருவத்தை காட்டிலும் 4.98 லட்சம் டன் அதிகம் ஆகும்.
உணவு தானியம் (Food Grains)
அரிசி, கோதுமை, சோளம், பருப்பு வகைகள், கடுகு எண்ணெய் வித்துகள் மற்றும் கரும்பு உற்பத்தியில் இந்தியா சாதனை படைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாயிகளுக்கு சாதகமான மத்திய அரசின் கொள்கைகள், விவசாயிகள் கடின உழைப்பு, விஞ்ஞானிகளின் விடா முயற்சி காரணமாக இது சாத்தியமாயிற்று எனக்கூறியுள்ளார்.
சமீபத்திய கணக்கீட்டின்படி, உணவு தானிய உற்பத்தியில் எவ்வளவு உற்பத்தி செய்யப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
- அரிசி -130.29 மில்லியன் டன்
- கோதுமை- 106.84 மில்லியன் டன்
- நவதானியம் -50.90 மில்லியன் டன்
- சோளம் -33.62 மில்லியன் டன்
- துவரை -4.34 மில்லியன் டன்
- பருப்பு வகைகள் -13.75 மில்லியன் டன்
- எண்ணெய் வித்துகள் -37.70 மில்லியன் டன்
- கடலை பருப்பு -10.11 மில்லியன் டன்
- சோயாபீன் - 12.99 மில்லியன் டன்
- கடுகு -11.75 மில்லியன் டன்
- கரும்பு - 43.81 மில்லியன் டன்
மேலும் படிக்க
முருங்கை சாகுபடியில் பிசினை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!
விவசாயிகள் எதிர்பார்ப்பு: சம்பா சிவப்பு மிளகாய் புவிசார் குறியீடு கிடைக்குமா?
Share your comments