Krishi Jagran Tamil
Menu Close Menu

கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

Saturday, 27 July 2019 11:39 AM
Rain In Chennai

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை உள்பட ஒரு சில   வடமாவட்டங்களில் மேலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது வெப்பம் தனிந்து மேக மூட்டமான வானிலையே  நிலவி வருகிறது. 

கர்நாடகா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை வலுவடைந்ததை தொடர்ந்து எல்லையோர மாவட்டங்களான  வேலூர், ஓசூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை வளிமண்டலத்தின் கீழடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவி வருகிறது. இதன் காரணமாக அடுத்து வரும் 24 மணி நேரத்துக்கு அதாவது இன்று  வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்க பட்டுள்ளது .

Meterology Department

தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  இதுவரை 89 மி.மீ. மழை பதிவாக உள்ளது” . கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருபுவனம் 9 செ.மீ., ஆரணி, திருப்பத்தூரில் 8 செ.மீ., உத்திரமேரூரில் 7 செ.மீ. மழை பதிவாக உள்ளது.

தற்போது பெய்து வரும் மழையால் நிலத்தடி நீர் உயர வாய்ப்பில்லை எனவும், இந்நிலை நீடித்து தொடர் மழை பெய்து வந்தால் நிச்சயம் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வானிலை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளார். வறட்சியை போக்க கூடிய அளவிற்கு மழை பொழிய வேண்டுமென்றால் அது வடகிழக்கு பருவமழையின் போது தான் எதிர்பார்க்க முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள் என கூறுகின்றனர்.

Anitha Jegadeesan
Krishi Jagran

Indian Meteorological Department Tamil Nadu Puducherry Monsoon Rains- Southwest Monsoon Heavy Rain Fall Chennai Thunderstorm Meteorological Department Weather Report Weather News

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription

Latest Stories

  1. பருவநிலை மாற்றத்தை எதிர்த்து வளரும் பழமை வாய்ந்த சிறுதானியம்
  2. இதயக்கோளாறுகளை சரி செய்ய உதவும் இயற்கை நிவாரணி: சிக்கு என்னும் `சீமை இலுப்பை'
  3. குறைந்து வரும் உற்பத்தி: இழப்பை தடுக்க தோட்டக்கலைத்துறையினர் ஆலோசனை
  4. கோடை விற்பனையை கருத்தில் கொண்டு விவசாயிகள் ஆர்வத்துடன் சாகுபடி
  5. சங்க காலம் முதல் பயன்படுத்தப்பட்டு வரும் ‘இடலை எண்ணெய்’ பற்றி தெரியுமா?
  6. நீரை சிக்கனப்படுத்தி, இரட்டிப்பு லாபம் தரும் பயறு வகை விதைப்பண்ணை
  7. கால்நடை பல்கலைக்கழக ஆராய்ச்சி மையம் வழங்கும் இலவச பயிற்சி
  8. சாகுபடி பரப்பு அதிகரிக்க நிதி ஒதுக்கீடு: அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் அறிமுகம்
  9. குறைந்த பரப்பளவு, குறைவான பாசனம், நிரந்தர வருவாய்
  10. நீங்கள் கடைகளில் வாங்கும் கருப்பட்டி உண்மையானதுதானா? எளிதில் அடையாளம் காண்பது எப்படி?

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.