பெரும்பாலான இந்தியர்கள் சுற்றுச்சூழலுக்கு நட்பான பொருட்களை வாங்குவதிலும், பூமியின் மீது நல்ல விதமாக தாக்கம் செலுத்தும் வர்த்தகங்களை ஆதரிப்பதிலும் ஆர்வம் கொண்டு உள்ளது தெரிய வந்துள்ளது. காலநிலை மாற்றம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழலில், பூமியின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையிலான நீடித்த தன்மை கொண்ட மற்றும் சுற்றுச்சூழலுக்கு நட்பான தொழில்நுட்பங்கள் மற்றும் வர்த்தகங்கள் மீதான கவனம் அதிகரித்து வருகிறது.
சுற்றுச்சூழல் (Environment)
இந்நிலையில் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் சர்வதேச அளவில் நடத்திய ஆய்வில், உலக அளவில் சுற்றுச்சூழலுக்கு ஆதரவான பொருட்களை வாங்குவதில் இந்தியர்கள் அதிக ஆர்வம் கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வில் பங்கேற்ற இந்தியர்களில் 97 சதவீதம் பேர் நீடித்த தன்மை கொண்ட வர்த்தகங்களின் பொருட்களை வாங்க தயாராக இருப்பதாக கூறியுள்ளனர்.
நீடித்த வளர்ச்சியை மையமாக கொண்டு சேவைகளுக்காக கூடுதலான தொகையை செலுத்த தயங்க மாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் வர்த்தகம் மற்றும் சமூகங்கள் மீது நல்லவிதமாக தாக்கம் செலுத்தும் பொருட்கள் மீது செலவு செய்வதிலும் இந்தியர்கள் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். மற்ற நாட்டினரை விட இந்தியர்கள் இதில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளனர்.
மேலும் படிக்க
பிளஸ் 2 வரை வேளாண் படிப்பு: வேளாண் ஆசிரியர்கள் வலியுறுத்தல்!
Share your comments