1. செய்திகள்

'தேன்' - உலகத்தரம் வாய்ந்த முதல் பரிசோதனைக்கூடம் குஜராத்தில் திறப்பு!

Daisy Rose Mary
Daisy Rose Mary
Honey testing lab inagurated

குஜராத்தில் தேன் பரிசோதனைக்கான முதல் உலகத் தரம் வாய்ந்த கலைத் தேன் பரிசோதனை ஆய்வகம்' திறக்கப்பட்டுள்ளது.

உலகத் தரம் வாய்ந்த கலைத் தேன் பரிசோதனை ஆய்வகம்

குஜராத் மாநிலம் ஆனந்தில் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் (National Dairy Development Board) 'உலகத் தரம் வாய்ந்த கலைத் தேன் பரிசோதனை ஆய்வகத்தை' (World Class Honey Testing Lab) நிறுவியுள்ளது. இதனை மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தேசிய தேனீ வாரியத்தின் (NBB) ஆதரவுடன் காணொளிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய மீன்வளத்துறை, கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், பர்ஷோட்டம் ரூபாலா மற்றும் கைலாஷ் சவுத்ரி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இந்தியாவில் அமைக்கப்பட முதல் தேன் பரிசோதனை ஆய்வகம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை

நிகழ்ச்சியில் பேசிய வேளாண் துறை அமைச்சர், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாகவும், தேனீ வளர்ப்பு (Bee-Keeping) நிறுவனம் விவசாயிகளின் வருமானத்தை ஈடுசெய்வதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்றும் மத்திய வேளாண்மை மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

விஞ்ஞான தேனீ வளர்ப்பு மூலம் அதிக மதிப்புள்ள தேன் மற்றும் தேனீ தயாரிப்புகளை உற்பத்தி செய்ய, பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை தோமர் தெரிவித்தார். மேலும், நிலமில்லாத விவசாயிகள் குறைவான தொழிலாளர்களை கொண்டு தேனீக்கள் வளர்ப்பதன் மூலம் விவசாயிகள் கூடுதல் வருவாய் ஈட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துவதே தேனீ வளர்ப்பு நிறுவனத்தின் நோக்கம் என்றார்.

தேன் உற்பத்தியில் கலப்படம்

இது குறித்து பேசிய, பால்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், தேன் உற்பத்தியில் கலப்படம் ஒரு பெரிய பிரச்சினையாகவும், அதிக பிரக்டோஸ் சோளம் சிரப் அல்லது அரிசி, மரவள்ளிக்கிழங்கு, கரும்பு மற்றும் பீட்ரூட் சிரப் ஆகியவற்றால் தேன் கலப்படம் செய்யப்படுவதாகவும், அவை விலை மலிவாக இருப்பதுடன், இயற்பியல்-வேதியியல் பண்புகளில் தேனை ஒத்திருக்கிறது என்றும் தெரிவித்தார். இதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் நாட்டில் இனிப்புப் புரட்சியைக் கொண்டு வரும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அறிவித்த அளவுகளின் அடிப்படையில், தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் (NDDP) இந்த உலகத்தரம் வாய்ந்த ஆய்வகத்தை அனைத்து வசதிகளுடன் அமைத்து சோதனை முறைகள் / நெறிமுறைகளை உருவாக்கியுள்ளது. அவை சோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியத்தின் (NABL) அங்கீகாரம் பெற்றவை. இப்போது இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) தேன், தேன் மெழுகு மற்றும் ராயல் ஜெல்லியின் புதிய தரங்களை அறிவித்துள்ளது.

மேலும் படிக்க...  

கடந்தை ஆண்டை விட அதிக பரப்பளவில் குறுவை சாகுபடி - மத்திய அரசு தகவல்!!

நோய்களை தீர்க்கும் வேப்பிலையின் மருத்துவ பயன்கள்!

தேனி வளர்ப்பு, காளான் வளர்ப்பு, மலர் தோட்டம் உள்ளிட்ட பல சிறு தொழில்கள் குறித்து படிக்க..

English Summary: Indias first Honey Testing Lab inaugurated at Gujarat by National Dairy Development Board

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.