இலவசக் கறவைப் பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள் திட்டத்திற்கு விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :
தமிழக அரசால் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு விலையில்லா கறவை பசுக்கள் ( Dairy Cows) வழங்கும் திட்டம் 2011-12ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக 2020-21ம் ஆண்டிலும், முதல்வரின் அறிவிப்புக்கு இணங்க, விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 8 கிராம ஊராட்சிகளுக்கும் மற்றும் வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 74 கிராம ஊராட்சிகளுக்கும் கிராமக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
அக்கிராம ஊராட்சிகளில் 29.09.2020 முதல் இத்திட்டத்திற்கு பயனாளிகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கி தகுதியான பயனாளிகள் பயன்பெறலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
கால்நடை மருத்துவம்- விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!
பல சத்துக்களைக் கொண்ட சீம்பால்- கன்றுகளின் ஆரோக்கியத்திற்கு!
Share your comments